யாழ். இந்துக் கல்லூரி அடிப்படை உரிமை மீறல் வழக்கு: நீதிமன்றின் உத்தரவு
யாழ் இந்துக் கல்லூரியின் அடிப்படை உரிமை மீறல் வழக்கின் நீதிமன்ற அவமதிப்பு விண்ணப்பத்தை மூல வழக்குடன் சேர்த்து நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயர்நீதிமன்ற நீதியரசர்களான குமுதினி விக்கிரமசிங்க மற்றும் கே. பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் முன்னிலையில் கடந்த (27-01-2026) அன்று இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் முதலாம் எதிர்மனுதாரரான ரட்ணம் செந்தில்மாறனுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு விண்ணப்பமே இவ்வாறு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
அடிப்படை உரிமை
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஏற்கனவே விசாரணைக்கு அனுமதியளிக்கப்பட்ட அடிப்படை உரிமை மீறல் வழக்குடன் இந்த நீதிமன்ற அவமதிப்பு விண்ணப்பத்தையும் சேர்த்து நடாத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன் அடிப்படையில் குறித்த விண்ணப்பமானது எதிர்வரும் (03-07-2026) ஆம் திகதிக்கு அடிப்படை உரிமை மீறல் வழக்குடன் சேர்த்து விசாரணைக்காக நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மனுதாரர்களான அமிர்தலிங்கம் லதாங்கன், திருநாவுக்கரசு சிவகுமரன் மற்றும் நடராஜா சிவானந்தராஜா ஆகியோர், முதலாம் எதிர்மனுதாரரான ரட்ணம் செந்தில்மாறன் நீதிமன்றத்தில் வழங்கிய உத்தரவாதத்திற்கு எதிராக நடந்து கொண்டுள்ளார் என்ற அடிப்படையில் இந்த நீதிமன்ற அவமதிப்பு விண்ணப்பத்தைத் தாக்கல் செய்து ஆவணங்களைச் சமர்ப்பித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அடிப்படை உரிமை மீறல் வழக்கின் ஒரு பகுதியாக இந்த நீதிமன்ற அவமதிப்பு விண்ணப்பம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இரண்டுமுறை பாரிய படுகொலைகளைச் சந்தித்த கொக்கட்டிச்சோலை… 2 நாட்கள் முன்