நான் என்ன பொய்யனா! உயிர் பிழைத்த வைத்தியரின் உடல் நடுங்கவைக்கும் வாக்குமூலம்
1987 ஆம் ஆண்டு யாழ்ப்பாண மருத்துவமனையில் இடம்பெற்ற அவலத்தின் அடையாளம் இன்றும் அழிக்க முடியாத ரணங்களாய் தமிழ்ர்கள் மத்தியில் வடுக்களாக பதிந்து கிடக்கிறது.
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தில், யாழில் இந்திய இராணுவம் மேற்கொண்ட ஒரு சோகத்தின் அடையாளமாக யாழ்ப்பாண மருத்துவமனை படுகொலை காணப்படுகிறது.
யாழ்ப்பாணத்தில் இந்திய இராணுவத்தின் இருப்பு 1987 இந்திய-இலங்கை ஒப்பந்தத்திலிருந்து உருவானது.
இந்த நகர்வில் ஒக்டோபர் 21–22, 1987 தீபாவளி அன்று IPKF துருப்புக்கள் யாழ். மருத்துவமனை மீது தமது கோர முகத்தின் அடையாலங்களை இதன்மூலம் பதித்திருந்தன.
ஒக்டோபர் 21 அன்று காலை 11:00 மணியளவில், யாழ்ப்பாணக் கோட்டைக்கு அருகில் இருந்து பீரங்கிகள் மற்றும் ஹெலிகாப்டர் துப்பாக்கிச் சூடுகள் மருத்துவமனை வளாகத்தின் மீது நடத்தப்பட்ட ஷெல் தாக்குதல் என்பன நோயாளிகள், வைத்தியர்கள், தாதியர்கள் என பாரபட்சமின்றி தமிழர்கள் கொல்லப்பட்ட கறுப்பு அடையாளமாக இந்த படுகொலை காணப்படுகிறது.
இந்த பின்னணியில் 1987 ஆம் ஆண்டு ஒக்டோபர் 21–22 அன்று யாழ்ப்பாண மருத்துவமனையில் உண்மையிலேயே என்ன நடந்தது என்பதை அந்த தருணத்தில் உயிர் பிழைத்த வைத்திய அதிகாரியின், உடல் நடுங்கவைக்கும் வாக்குமூலத்தில் வெளிப்படுத்திய விடயங்களை தொகுத்து வருகிறது ஐ.பி.சி தமிழின் அவலங்களின் அத்தியாயங்கள்...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
