ஹோர்முஸ் நீரிணையை கடக்கும் கப்பல்களிடம் புதிய கட்டணம்! ஈரானின் அடுத்த திட்டம்
ஹோர்முஸ் நீரிணையை கடந்து செல்லும் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்குப் பதிலாக அவற்றிடம் இருந்து சேவை கட்டணங்களை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஈரான் தெரிவித்துள்ளது.
எனினும், இது வழக்கமான போக்குவரத்து சுங்கக் கட்டணம் அல்ல என்று அந்நாடு தெளிவுபடுத்தியுள்ளது.
ஈரான் கப்பல்களிடம் இருந்து வழித்தடக் கட்டணங்களையோ, போக்குவரத்து வரிகளையோ அல்லது போக்குவரத்து உரிமைக்கான கொடுப்பனவுகளையோ வசூலிக்க முற்படவில்லை என்று அந்நாட்டின் துணை வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய நடைமுறைகள்
அதற்குப் பதிலாக, ஓமான் நாட்டுடன் இணைந்து வழங்கப்படும் வழிசெலுத்தல் உதவி, தேடல் மற்றும் மீட்புப் பணிகள், பாதுகாப்பு சேவைகள் மற்றும் கடலில் மாசு ஏற்படும் பட்சத்தில் மேற்கொள்ளப்படும் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தல் பணிகள் போன்ற சேவைகளுக்கான இழப்பீட்டையே ஈரான் கோரவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நீர்வழிப்பாதை முற்றிலும் ஈரான் மற்றும் ஓமான் நாடுகளின் பிராந்திய எல்லைக்குட்பட்ட கடற்பரப்பிற்குள் அமைந்துள்ளதாகக் குறிப்பிட்ட கரீபாபாடி, சர்வதேச சட்டம் மற்றும் கடல்சார் சட்டத்தின் கீழ் அந்த அரசாங்கங்களுக்கு இந்த நீரிணையின் மீது இறையாண்மை உள்ளது என்றும் கூறியுள்ளார்.
தற்போது வரைவு செய்யப்பட்டு வரும் இந்த புதிய நடைமுறைகள் சர்வதேச சட்டத்திற்கு இணங்கவே அமையும் என்றும், இந்நடவடிக்கை சில நாடுகளுக்கு 100 வீதம் திருப்தி அளிக்காமல் போகலாம் என்றும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்…
3 நாட்கள் முன்