192,641 அரச ஊழியர்களுக்கு கிடைத்த திருத்தப்பட்ட ஓய்வூதியம்!
2019 ஜனவரி 1 அல்லது அதற்கு முன்னர் ஓய்வுபெற்ற 192,641 அரச ஊழியர்களுக்கான திருத்தப்பட்ட ஓய்வூதியப் பலன்கள் தற்போது முழுமையாக வழங்கப்பட்டுள்ளதாக ஓய்வூதியத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சாமிந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
2025 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு அமைவாக ஆரம்பிக்கப்பட்ட அரசாங்க ஓய்வூதிய திருத்தத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியங்களை மறுசீரமைக்கும் நடவடிக்கை 2026 ஜூலை 1 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
அதன் முக்கிய கட்டமாக, 2026 ஜூலை 10 ஆம் திகதியன்று இடம்பெற்ற ஓய்வூதியக் கொடுப்பனவு நாளுக்குள், தகுதி பெற்ற 192,641 ஓய்வூதியதாரர்களுக்கு திருத்தப்பட்ட ஓய்வூதியத் தொகைகளை வெற்றிகரமாக வழங்கி முடித்துள்ளதாக ஓய்வூதியத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஓய்வூதியத் திணைக்களம்
இன்னும் திருத்தப்பட்ட பலன்களைப் பெற வேண்டியுள்ள ஏனைய தகுதியுடைய ஓய்வூதியதாரர்களுக்கான நடவடிக்கைகளும் தற்போது விரைவாகவும் தொடர்ச்சியாகவும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார்.

ஓய்வூதியதாரர்களுக்கு மேலும் திறமையான, ஒழுங்குமுறைப்பட்ட மற்றும் தரமான சேவையை வழங்கும் நோக்கில் திணைக்களத்தின் அனைத்து பணியாளர்களும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக சுட்டிக்காட்டினார்.
இந்த நடவடிக்கையை வெற்றிகரமாக முன்னெடுக்க ஓய்வூதியதாரர்கள் வெளிப்படுத்தும் பொறுமை மற்றும் ஒத்துழைப்பை திணைக்களம் பாராட்டுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்…
3 நாட்கள் முன்