யாழ் சர்வதேச விமான நிலையம் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கத்திற்கு முக்கிய அறிவிப்பை விடுத்துள்ள இந்தியா!
யாழ்ப்பாணம் சென்னைக்கு இடையேயான விமான சேவை மேம்படுத்தலுக்காக சிறிலங்கா அரசாங்கத்திற்கு இந்தியா நன்றி தெரிவித்துள்ளது.
அலையன்ஸ் எயார் விமான சேவை மீண்டும் ஆரம்பிப்பதை குறிக்கும் வகையில் நேற்று விமான நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது ஒலிப்பரப்பட்ட பதிவு செய்யப்பட்ட உரையில் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,
“யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் வசதிகளை மேம்படுத்துவதற்கும், விரிவுபடுத்துவதற்கும் சிறிலங்கா அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற இந்தியா எப்போதும் தயாராக உள்ளது.
மேம்படும் வர்த்தகம் மற்றும் சுற்றுலா
இந்த நடவடிக்கை இந்தியாவுக்கும் யாழ்ப்பாணம் மற்றும் இலங்கையின் பிற இடங்களுக்கும் இடையே நேரடி மற்றும் விரைவான விமானப் பயணம், வர்த்தகம் மற்றும் சுற்றுலாவை குறிப்பிடத்தக்க வகையில் மேம்படுத்தும்.
இது இரு நாட்டு மக்களிடையே பாரம்பரிய உறவுகளை வலுப்படுத்துவதுடன் வணிகத்தின் சிறிய மற்றும் நடுத்தர பிரிவுகளுக்கும் பயனளிக்கும்” என்றும் பாக்லே தெரிவித்தள்ளார்.
YOU MAY LIKE THIS