யாழ்.வர்த்தகக் கண்காட்சியும் தொழில் முயற்சிகளுக்கான வாய்ப்புகளும்!
வட இலங்கையின் முதன்மையான மாபெரும் வர்த்தக நிகழ்வான 2026 ஆம் ஆண்டுக்கான யாழ்ப்பாண சர்வதேச வர்த்தகக் கண்காட்சி, இன்று (23-01-2026) முதல் எதிர்வரும் (25-01-2026) ஆம் திகதி வரை மிகப்பிரம்மாண்டமாக இடம்பெறவுள்ளது.
யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறவுள்ள இக்கண்காட்சியானது, வடபகுதியின் மிகப்பெரிய வருடாந்த வர்த்தகத் திருவிழாவாக 16 ஆவது வருடமாகத் தொடர்கின்றது.
இலங்கை மற்றும் வெளிநாடுகளில் உள்ள முன்னணி தொழில் முயற்சியாளர்கள், வர்த்தக வல்லுநர்கள் மற்றும் சமூக உறுப்பினர்களை ஒரே தளத்தில் ஒன்றிணைக்கும் ஒரு காத்திரமான பொருளாதார நிகழ்வாக இது முன்னெடுக்கப்படுகின்றது.
பிராந்தியத்தின் வர்த்தக வாய்ப்புகளை மேம்படுத்துவதோடு, உள்ளூர் உற்பத்திகளைச் சர்வதேச சந்தைக்குக் கொண்டு செல்லும் ஒரு பாலமாக இக்கண்காட்சி அமையும் என்பது வர்த்தக சமூகத்தின் எதிர்பார்ப்பாகும்.
இந்தநிலையில், இக்கண்காட்சியின் ஊடாக வடபகுதிப் பொருளாதாரம் அடையப்போகும் மாற்றங்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்களுக்கான வாய்ப்புகள் குறித்து விரிவாக ஆராய்கிறது ஐபிசி தமிழின் இன்றைய அகளங்கம் நிகழ்ச்சி...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |