ரஷ்யா - உக்ரைன் போர் முடிவுக்கு அமெரிக்காவின் அதிரடி நகர்வு...!
உக்ரைனுடனான போர் முடிவு குறித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினைச் சந்திக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் உயர்மட்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், "நான் இங்கு உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கியைச் சந்தித்தேன்.
போர் முடிவு
அவருடனான சந்திப்பு மிக நன்றாக அமைந்தது.
புடினை அமெரிக்கப் பிரதிநிதிகள் குழு நாளை சந்திக்கவுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இப்போரில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், போர் விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
ரஷ்யா - உக்ரைன் இடையே 2022 ஆம் ஆண்டு முதல் போர் நடைபெற்று வரும் நிலையில், போரை முடிவுக்குக் கொண்டுவரப் பல்வேறு நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன.
குறிப்பாக, போர்நிறுத்த நடவடிக்கைகளில் ட்ரம்ப் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |