ஜம்மு-காஷ்மீரில் பயங்கரம் :200 அடி பள்ளத்தாக்கில் விழுந்த இராணுவ வாகனம்: பத்து வீரர்கள் உயிரிழப்பு
India
Jammu And Kashmir
Death
Indian Army
By Sumithiran
ஜம்மு-காஷ்மீரின் தோடாவில் இராணுவ வாகனம் பள்ளத்தில் வீழ்ந்த விபத்தில் 10 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர் மேலும் 7 பேர் காயமடைந்தனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மொத்தம் 17 வீரர்களுடன், உயரமான பகுதியில் உள்ள ஒரு முகாமை நோக்கி இராணுவ வாகனம் சென்றுள்ளது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் 200 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது.
சம்பவ இடத்தில் பலியானவர்கள்
சம்பவ இடத்திலேயே நான்கு வீரர்கள் உயிரிழந்ததாகவும், காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

படுகாயமடைந்த சில வீரர்கள் சிறப்பு சிகிச்சைக்காக உதம்பூர் இராணுவ மருத்துவமனைக்கு உலங்குவானூர்தி மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அங்கு சிகிச்சையில் இருந்த ஆறு வீரர்கள் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை பத்தாக உயர்ந்துள்ளது
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி