ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல்: டக்ளஸ் கண்டனம்
நாட்டில் இயல்பான சூழ்நிலை காணப்படும் இந்த காலகட்டத்தில் ஊடகவியலாளர்கள் மீது வன்முறைத் தாக்குதல்களும் அச்சுறுத்தல்களும் விடுக்கப்பட்டுவருவதை ஏற்கமுடியாது என சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) அத்தகைய செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடகவியலாளரான தம்பித்துரை பிரதீபன் வீட்டின் மீது அண்மையில் நடத்தப்பட்ட வன்முறை தாக்குதல் தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் அமைச்சர் கூறுகையில், “அன்று அதை செய்தவர்கள் ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கிற மாதிரியான போர்வையிலேயே அதை முன்னெடுத்திருந்தனர்.
ஊடகவியலாளர்
குறிப்பாக ஊடகவியலாளர் மீது தங்களுடைய வஞ்சகத்தை தீர்த்துக் கொள்வது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் அதன் பழியை ஈ.பி.டி.பி மீது இலகுவாக போட்டு தாம் தப்பித்துக்கொள்வதாக இருந்தது.
கடந்த காலத்தில் வன்முறைக்கு தலைமை தாங்கியவர்கள் ஈ.பி.டிபினுடைய மாற்றுக் கொள்கை அல்லது மாற்று வேலைதிட்டத்தை விரும்பாததால் அல்லது தாங்கள் செய்வது அம்பலப்பட்டு போகும் என்பதை விரும்பாததால் ஈ.பி.டி.பியை ஏதோ ஒரு வகையில அளிக்க முற்பட்டார்கள்.
குறிப்பாக, உயிர் அச்சுறுத்தல் மற்றும் உயிராபத்துகளையும் ஏற்படுத்தியது மட்டுல்லாமல் ஈ.பி.டி.பியுடைய நற்பெயருக்கு கலங்கத்தை ஏற்படுத்த முயற்சிகளை செய்தார்கள்.
உண்மை
அதைத்தான் நான் இந்த சந்தர்ப்பத்தில் சகோதரர் பிரதீபன் விடயத்திலும் கூறவிரும்புகின்றேன்.
அந்தவகையில் எல்லோரும் விழிப்பாக இருந்து உண்மை வெளிவருமானால் இவ்வாறான சம்பவங்களை நாங்கள் இல்லாமல் செய்யலாம் என்று நான் நம்புகின்றேன்” என கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்.. |