யாழில் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது
யாழ்ப்பாணம் - இளவாலையில் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய நபரொருவர் கைக்குண்டுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேகநபரிடம் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் மேலும் ஒரு சந்தேகநபர் சான்று பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது நேற்று (14) திருட்டு வழக்குகளில் தலைமறைவாகியிருந்த இளவாலை நாதவோலை பகுதியினை சேர்ந்த 37 வயதான நபரை கைது செய்ய சென்றபோது சந்தேக நபரிடம் இருந்து கைக்குண்டு மற்றும் கத்தி என்பன கைப்பற்றப்பட்டது.
காவல்துறையினரின் விசாரணை
குறித்த சந்தேநபரை கைது செய்த காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
இதனடிப்படையில் திருடிய இலத்திரனியல் மற்றும் சமையல் பொருட்களை சாவகச்சேரி பகுதியில் உள்ள ஒருவருக்கு விற்பனை செய்ததாக தெரிவித்தார்.
சந்தேக நபரிடம் இலத்திரனியல் உபகரணங்கள், சமையல் உபகரணங்களை கொள்வனவு செய்த 25 வயது மதிக்கத்தக்க இளைஞரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
சந்தேகநபர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் முற்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |