இஷாரா செவ்வந்தி இந்தியா தப்பிச் செல்ல படகு வழங்கிய யாழ்ப்பாணத்தவர் கைது
கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தில் சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி, துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு பின்னர் இந்தியாவுக்குத் தப்பிச் செல்வதற்குப் படகு வழங்கி உதவியதாகக் கூறப்படும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம், மண்டைதீவு பகுதியைச் சேர்ந்த 'பலசி' என அழைக்கப்படும் ஜேசுதாசன் செல்வசேத் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் காவல்துறையினர் தெரிவித்தனர்.
காவல்துறையின் விசேட நடவடிக்கை
மன்னார், இலுப்பைக்கடவை காவல்துறை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இஷாரா செவ்வந்தி துப்பாக்கிசூட்டு சம்பவத்திற்கு பின்னர் யாழ்ப்பாணத்திற்கு வந்து இந்தியாவுக்குத் தப்பிச் செல்வதற்கு இவரே படகு வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |