மண்டைதீவு புதைகுழி வழக்கு - காவல்துறையினருக்கு நீதிமன்றத்தின் உத்தரவு

Sri Lanka Police Sri Lankan Tamils Jaffna Sri Lanka Police Investigation chemmani mass graves jaffna
By Theepan Dec 16, 2025 11:12 AM GMT
Report

மண்டைதீவு புதைகுழி வழக்கின் அறிக்கை இன்று (16) ஊர்காவற்றுறை நீதிமன்றில் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினரால் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் குறித்த அறிக்கையை தட்டச்சு வடிவில் பிரதியாக்கம் செய்து நாளையதினம் சமர்பிக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

முன்பதாக யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினர், மண்டைதீவு புதைகுழி வழக்கின் சாட்சிகள் மற்றும் சான்றுகளை திரட்டி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதாக இன்றையதினம் (16) திகதியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று (16) குறித்த வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றின் நீதிபதி சுபாஸ்கரன் நாளினி முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை...! நகைகள் வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல்

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை...! நகைகள் வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல்

காவல் நிலையத்தில் பதிவு

இதன்போது மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினர் குறித்த வழக்கு தொடர்பாக அப்பிரதேச மக்கள், கடற்படை மற்றும் படையினரிடம் பெற்ற சாட்சிகள் மற்றும் சுட்டிக்காட்டப்பட்ட கிணறு தொடரான கிடைக்கப்பெற்ற சான்றுகள் உள்ளிட்டவற்றின் அறிக்கையை எழுத்து மூலமாக நிதிமன்றில் சமர்ப்பித்தனர்.

மண்டைதீவு புதைகுழி வழக்கு - காவல்துறையினருக்கு நீதிமன்றத்தின் உத்தரவு | Jaffna Mandaitivu Mass Grave Case Court Order

கையால் எழுதிய குறித்த அறிக்கையை யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறை அதிகாரி சமர்ப்பித்து, விளக்கத்தை நீதிபதிக்கு சமர்ப்பணம் செய்த நிலையில் குறித்த அறிக்கையை தட்டச்சில் பிரதியாக்கம் செய்து நாளையதினம் (17.12.2025) மீண்டும் அறிக்கையை சமர்பிக்குமாறு நீதிவான் காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

முன்பதாக மண்டைதீவு புதைகுழி தொடர்புடைய உடலங்கள் புதைக்கப்பட்டதாக கூறப்படும் கிணறுகளை அகழ்ந்து, குறித்த சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணை முன்னெடுக்கப்பட்டு உண்மைகள் வெளிக்கொணரப்படுவதுடன் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு நீதியும் பரிகாரமும் வழங்கப்பட வேண்டும் என்று கோரி ஊர்காவற்றுறை காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு கடந்த செப்டம்பர் மாதம் 04 ஆம் திகதியன்று குறித்த சம்பவத்தில் தனது மகனை பறிகொடுத்த 81 வயதுடைய ஸ்ரிபன் மரில்டா என்பவர் மற்றும் வேலணை பிரதேச சபையின் உறுப்பினரும் தீவக முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான சுவாமிநாதன் பிரகலாதன் ஆகியோரால், வேலணை பிரதேச சபையின் உறுப்பினர்ககான அனுசியா ஜெயகாந்த், கருணாகரன் நாவலன், திருநாவுக்கரசு சிவகுமாரன், செந்தமிழ்ச்செல்வன் திருக்கேதீஸ்வரன், மங்களேஸ்வரன் கார்த்தீபன் ஆகியோரது பிரசன்னத்துடன் இருவேறு முறைப்பாடுகள் ஊர்காவற்றுறை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது.

இன்று சென்னை பறக்கும் தமிழ் அரசியல் பிரமுகர்கள் - முக்கிய சந்திப்புகள்

இன்று சென்னை பறக்கும் தமிழ் அரசியல் பிரமுகர்கள் - முக்கிய சந்திப்புகள்

நீதிமன்றத்தில் விசாரணை

இவ் விடயம் தொடர்பில் விசாரணை நடத்தி அந்தக் கிணறுகளைச் சட்ட ரீதியாக அகழ்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரியே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மண்டைதீவு புதைகுழி வழக்கு - காவல்துறையினருக்கு நீதிமன்றத்தின் உத்தரவு | Jaffna Mandaitivu Mass Grave Case Court Order

இந்நிலையில் இந்த வழக்கு கடந்த 17.09.2025 புதன் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதன்போது, ஊர்காவற்துறை காவல்துறையினரினால் அகழ்வுப் பணியை முன்னெடுப்பதற்கான வசதிகள் இல்லை என்று சுட்டிக்காட்டப்பட்து.

இதனையடுத்து இவ்வழக்கு யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத் தடுப்புப் பிரிவினரிடம் பாரப்படுத்தப்பட்டுள்ளதுடன் மண்டைதீவு மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறும் யாழ். மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவுக்கு நீதிவான் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

ஆனாலும் பல வருடங்கள் கடந்த விடையம் என்பதால் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினர் அறிக்கை சமர்ப்பிக்க கால அவகாசம் கோரியமையால் வழக்கு டிசம்பர் மாதம் 16 ஆம் திகதிக்கு திகதியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த வழக்கு டிசம்பர் 16 ஆம் திகதியான இன்று மன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் நாளை தட்டச்சு செய்யப்பட்ட அறிக்கையை சமர்ப்பிக்குமாறு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு நீதிமற்று உத்தரவிட்டுள்ளது.

மூன்றாம் தவணைப் பரீட்சை : கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

மூன்றாம் தவணைப் பரீட்சை : கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, உரும்பிராய்

16 Dec, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Watford, United Kingdom

16 Dec, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

15 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, சென்னை, India

14 Dec, 2019
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025