மாதகல் காணிகளை கடற்படைக்கு வழங்குவதாக தெரிவிக்கப்பட்டதா? உண்மையை வெளிப்படுத்திய ஆளுநர்!
மாதகல் காணிகளை கடற்படைக்கு வழங்குவதாக நான் ஒருபோதும் கருத்து தெரிவிக்கவில்லை என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.
இன்று தனியார் நிறுவனம் ஒன்றின் நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
வடமாகாண ஆளுநர், கடற்படைக்கு மாதகல் காணிகளை வழங்குவதாக தெரிவித்து சில ஊடகங்களில் நேற்று செய்திகள் வெளிவந்த நிலையில், அந்த கருத்துக்களை அவர் மறுத்துள்ளார்.
அதேவேளை நேற்றைய தினம் நான் காணி உரிமையாளர்களுடன் பேசுவதாக வெளியான செய்தி பிழையானது. இன்றைய தினமே முதன்முதலாக காணி உரிமையாளர்களுடன் நான் நேரடியாக கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளேன்.
காணி உரிமையாளர்களுடன் பேசி காணியின் உறுதிகளை சரி பார்த்து, காணி உரிமையாளர்களின் நிலைப்பாடுகளை அறிந்த பின்னரே முடிவுகளை எடுக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.