சுரேஸ் சலே மனைவி போன்று 1962 இல் கதறிய படைத்தரப்பின் 8 பேரின் அவல நிலை
இலங்கையின் ஜனநாயக அரசை கவிழ்த்து ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் இராணுவம் மற்றும் காவல்துறையின் சில உயரதிகாரிகள் இணைந்து முன்னெடுத்திருந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதி அரசாங்கத்தால் முறியடிக்கப்பட்ட வரலாறு இன்றைய சலேவின் கைது விவகாரத்தை நினைவுபடுத்துகிறது.
1962 ஜனவரி 27 ஆம் திகதி, பிரதிக் காவல்துறை மா அதிபர் சி.சி. திஸாநாயக்க, கொழும்பு காவல்துறை சுப்பிரெண்டண்ட் ஸ்டான்லி சேனாநாயக்கவிடம் இரகசிய நடவடிக்கை தொடர்பாக தகவல் பகிர்ந்ததாக கூறப்படுகிறது.
பின்னர் இந்த தகவல் ஸ்டான்லியின் மனைவி மாயா ஊடாக அவரது தந்தையும் நாடாளுமன்ற உறுப்பினருமான பட்ரிக் டி சில்வா குலரத்னவுக்கு தெரியப்படுத்தப்பட்டது.
இதையடுத்து, தகவல் காவல்துறை உயரதிகாரிகள் மற்றும் அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.
பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க மற்றும் அவரது ஆலோசகர்கள் அவசர ஆலோசனைகளை மேற்கொண்டு சதியை முறியடிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
விசாரணைகளில், இராணுவ அதிகாரிகளான கர்னல் பிரெட்ரிக் சி. டி சேரம், கர்னல் மொரீஸ் டி மெல் மற்றும் ரியர் அட்மிரல் ரோய்ஸ் டி மெல் உள்ளிட்டோர் சதியுடன் தொடர்புடையவர்கள் என தெரியவந்தது.
காவல்துறையின் சில உயரதிகாரிகளும் இதில் சம்பந்தப்பட்டிருந்ததாக கூறப்பட்டது. சதியாளர்களின் திட்டப்படி பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவை வீட்டுச் சிறையில் வைத்து நாட்டின் ஆட்சியைக் கைப்பற்ற நடவடிக்கை எடுக்கப்படவிருந்தது. எனினும், அரசாங்கம் முன்கூட்டியே தகவலை அறிந்ததால் திட்டம் முழுமையாக தோல்வியடைந்தது.
அரசாங்கத்தின் உத்தரவின் பேரில் முக்கிய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதுடன், நாட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. பின்னர் வானொலி ஊடாக நாட்டுமக்களுக்கு இந்த ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இலங்கை வரலாற்றில் முக்கிய அரசியல் சம்பவமாகக் கருதப்படும் இந்த ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி, ஜனநாயக ஆட்சிக்கு எதிரான மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக பதிவாகியுள்ள பின்னணியை விரிவாக ஆராய்கிறது தொடரும் காணொளி...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |