கட்டாய குடும்ப கட்டுப்பாடு: யாழ் வந்த அமெரிக்க வைத்தியர் வெளியிட்ட உண்மைகள்!
யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி வளாகத்தில் (CTRB), ஒரே நாளில் சத்திரசிகிச்சை முடித்து வீடு திரும்பத்தக்க வகையிலான புதிய நிலையம் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.
யாழ். மருத்துவ பீடம், போதனா வைத்தியசாலை, உயர்கல்வி அமைச்சு மற்றும் சர்வதேச மருத்துவ சுகாதார அமைப்பு ஆகியவற்றுடன் புலம்பெயர் அமைப்புகளின் பங்களிப்போடு இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சிறிய வகை சத்திரசிகிச்சைகளுக்காக நோயாளர்கள் நீண்டகாலம் காத்திருப்பதைக் குறைப்பதும், அதீத மருத்துவச் செலவுகளைத் தவிர்ப்பதுமே இந்த நிலையத்தின் பிரதான நோக்கமாகும்.
இந்நிகழ்வில் அமெரிக்காவில் உள்ள சர்வதேச மருத்துவ சுகாதார அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வைத்திய கலாநிதி காருண்யனும் கலந்துகொண்டிருந்தார்.
இந்தத் திட்டம் குறித்து அவர் தெரிவித்த விரிவான கருத்துகளுடன் வருகின்றது ஐபிசி தமிழின் அகளங்கம் நிகழ்ச்சி...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
போர்க்காலத்தின் தகவல் பரிமாற்ற ஊடகமாக விளங்கிய வானொலி 4 மணி நேரம் முன்