யாழில் இந்தியத்தூதுவர் அளித்த உறுதிமொழி - வெளிப்படுத்திய சுமந்திரன்
இனப்பிரச்சனைக்கு தீர்வாக அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் இந்தியா தமது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளதாக இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே குறிப்பிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே இன்றையதினம் தமிழர் தரப்பிலுள்ள பல்வேறு கட்சிகளின் பிரதிகளையும் யாழ்ப்பாணத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பின் போதே தூதுவர் கோபால் பாக்லே இதனைத் தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்தும் இந்த கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மாகாணசபை தேர்தல் நடத்தப்பட வேண்டியதன் அவசியம் குறித்து இந்தியத் தூதுவருக்கு எடுத்துக்காட்டப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்ணேஸ்வரன் குறிப்பிட்டார்.