யாழ்ப்பாணம் - பலாலி வீதியில் ஒளிர மறுக்கும் விளக்குகள்: மக்கள் கடும் விசனம்
யாழ்ப்பாணம்(Jaffna)- பலாலி வீதி, உரும்பிராய் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள மின் விளக்குகள் மிக நீண்டகாலமாக ஒளிராததால் தாங்கள் மிகவும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்த மக்கள், இலங்கை மின்சார சபை மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஆகிய இரண்டு அரச நிறுவனங்களுக்கும் உரித்தான சுமார் 20க்கும் அதிகமான வீதி விளக்குகள் குறித்த வீதியில் பொருத்தப்பட்டுள்ளன.
இருப்பினும் மிக நீண்ட காலமாக அந்த வீதி விளக்குகள் ஒளிர்வதில்லை.
வீதி விளக்குகள்
சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களான வலி. கிழக்கு பிரதேச சபை, வீதி அபிவிருத்தி அதிகாரசபை, இலங்கை மின்சார சபை ஆகியவற்றில் தடவைகள் நாங்கள் எழுத்து மூலமான அறிவித்தல் வழங்கியும் அவர்கள் அந்த வீதி விளக்குகள் ஒளிர்வதற்கான வேலைத்திட்டங்களை செய்யவில்லை.
உரும்பிராய் சந்தியில் அதிகளவான வர்த்தக நிலையங்கள் மற்றும் மதுபான நிலையம் காணப்படுவதால் அங்கு சனநெரிசல் காணப்படுகிறது.
அதன் காரணமாக குறித்த பகுதியில் தொடர்ந்து வீதி விபத்துகள் இடம்பெறுகின்ற நிலைமை காணப்படுகிறது.
ஆகவே இந்த பகுதியில் வீதி விளக்குகளின் தேவை அவசியம் என்பதால் உடனடியாக உரிய அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |