யாழ் குடாநாட்டில் பொதுமக்கள் அசட்டையீனம்
covid
jaffna
people
By Vanan
யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளாந்தம் அதிகரித்துவரும் நிலையில் அதனை கருத்திற்கொள்ளாது பொதுமக்கள் செயற்படுவதை அவதானிக்க முடிந்துள்ளது.
நாடு பூராகவும் கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்றையதினம் யாழ். மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை மீறி வீதிகளால் அதிகமானோர் பயணிப்பதை அவதானிக்க முடிந்தது.
இவ்வாறு பொதுமக்கள் அலட்சியமாக செயற்படுவது கொரோனா தொற்று நிலையை இன்னமும் வீரியப்படுத்துமென தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் நேற்று இரவு கொக்குவில் பகுதியில் பொலிஸ், விசேட அதிரடிப் படை மற்றும் இராணுவத்தினரால் விசேட சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி