யாழ். மக்களுக்கு அரசாங்க அதிபர் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை!

Jaffna People Makeshan GA
By Chanakyan Apr 29, 2021 10:07 AM GMT
Report

அவசரகால நிலை ஏற்பட்டால் அதனை எதிர்கொள்வதற்குத் தேவையான தயார்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் தேவைக்கு ஏற்றவாறு உங்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்யலாம் எனினும் தற்போதைய நிலையில் அரசானது பாரிய முடக்க நிலை அறிவிக்காது எனவும் மக்களுடைய அன்றாட வாழ்க்கை பாதிக்காத வண்ணம் ஒரு அசௌகரியத்தை எதிர்கொள்ளாத வண்ணம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் இடம்பெற்ற வடமாகாண நிலைமை தொடர்பாக ஆராயும் கூட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,


யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்றுவரை 1544 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். நேற்றையதினம் 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்றுவரை 19 உயிரிழப்புக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது இந்த நிலையில் கடந்த வாரம் யாழ்.மாவட்ட நிலைமையை ஆராய்ந்து ஒரு சில நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தோம்.

சுகாதார வழிமுறைகளை அமுல்படுத்துவதில் உள்ள இடர்பாடுகள் பிரச்சனைகள் விழிப்புணர்வு நடவடிக்கைகளை முறையாக அமுல்படுத்தல். அதனை பின்பற்றாத நிலைமை காணப்படுவதாக ஆராயப்பட்டது.

* கடல்கடந்து மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடியாளர்கள் ஏனைய தமிழ் நாட்டு மீனவர்களுடன் தொடர்பு கொள்ளக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகின்றமை அவதானிக்கப்பட்டது கைதுகளும் இடம்பெற்றுள்ளன.

*  அவ்வாறன சட்டவிரோத கடல் பயணங்கள் தடுக்கும் வகையில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மீனவர்களும் கரையோரப் பகுதி மக்களுக்கும் மேற்கொள்ள வேண்டும்.

* தனிமைப்படுத்தல் நிலையங்கள் தொடர்பில் ஆராயபட்டதோடு தனிமைப்படுத்தல் நிலையங்களை தேவைக்கேற்ப அதிகரிப்பதற்குரிய விடயங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

* சுகாதார அமைச்சு , கோவிட் மத்திய நிலையத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தடைகள் வழிகாட்டல்களை தொடர்ச்சியாக பின்பற்றுதல் அதனை மாவட்ட நிலைமைக்கு ஏற்றவாறு அனுசரித்து செயற்படுத்தல் தொடர்பாகவும் தீர்மானித்திருந்தோம்.

* நெரிசல் மிக்க நகரப்பகுதிகளில் நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் சில போக்குவரத்து ஒழுங்குகள், சில மாற்றங்களை பின்பற்றுதல் மேற்கொள்ளப்படும். வைத்தியசாலைகளில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறிப்பாக ஒக்சிஜன் நிலைமை தொடர்பில் ஆராயப்பட்டது.

பெரும்பாலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் அதாவது வடக்கு மாகாணத்தில் திருப்திகரமாக இருந்தாலும் அதற்குரிய முன்னேற்பாடு நடவடிக்கை எடுப்பதாகவும் கலந்துரையாடப்பட்டது.

* போக்குவரத்தில் ஈடுபடுகின்ற பேருந்துகள் ஆசனத்திற்கு அமைய பயணிகள் ஏற்றவேண்டும் இருந்தபோதும் தூர இடங்களுக்கான சேவைகளை அந்த விதத்தில் செயற்படுத்தும் போது சேவைகளை அதிகரிப்பது தொடர்பான ஒரு வேண்டுகோளை இலங்கை போக்குவரத்து சபை, தனியாரிடம் கோரப்பட்டுள்ளது.

* சகல வழிபாட்டு தலங்களிலும் சுகாதார நடைமுறைகளுக்கு ஏற்றவாறு ஆலயத்தில் மதகுரு மற்றும் உபயகாரருடன் மக்களின் பங்கு பற்றுதல் இன்றி ஆலய செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

* திருமண மண்டபங்களை பொறுத்தவரை சில விடயங்கள் கலந்துரையாடப்பட்டு பின்பு ஏற்கனவே தேசிய மட்ட சுகாதார வழி காட்டல் களுக்கமைய திருமண மண்டபங்களை இயங்கலாம். ஆனால் அதற்கு முன்பாக அவர்கள் திருமணத்தில் கலந்து கொள்வோரின் அவருடைய பெயர் பட்டியல் உட்பட பல விவரங்களை பொது சுகாதார பரிசோதகரிடம் சமர்ப்பித்து உரிய அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

மண்டப உரிமையாளர்கள் அதற்குரிய சுகாதார வழிகாட்டலை பின்பற்ற வேண்டும் என இதனை கண்காணிப்பதற்கு பொலிஸ் தரப்பினரும் இணைந்து செயற்பட வேண்டும்.

* யாழ் மாவட்டத்தில் 25 வீத பங்களிப்புடன் சினிமா திரையரங்கில் செயற்படுத்துவது தொடர்பில் இன்றைய தினம் ஆராயப்பட்டது.

தற்போதைய கொரோனா நிலைமையில் யாழ் மாவட்டத்தைப் பொருத்தவரை ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும் அபாயமான நிலைமையினை எந்த நேரமும் எதிர்கொள்ள வேண்டிய கடப்பாட்டில் இருக்கின்றோம்.

யாழ் மாவட்ட மக்கள் இக்கட்டான நிலைமையை கடந்து செல்வதற்கு அனைத்து தரப்பினரும் பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி