யாழில் களைகட்டும் பொங்கல்! ஆர்வத்துடன் தயாராகும் மக்கள்
உலகம் முழுவது உள்ள தமிழர்கள் நாளைய தினம் பொங்கல் பண்டிகையை கொண்டாட உள்ள நிலையில், யாழ்ப்பாணத்தில்(Jaffna) மக்கள் பொங்கலை கொண்டாட தயாராகி வருகின்றனர்.
அந்த வகையில், யாழ்ப்பாணத்தில் மண் பானை தயாரிப்பு, விற்பனை மற்றும் பொங்கல் வியாபாரம் என்பன அமோகமாக இடம்பெற்று வருகிறது.
இதேவேளை, மன்னார் மாவட்டத்திலும் பொங்கல் கொண்டாட்டங்களுக்கான பொருட்கொள்வனவில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பொங்கல் கொண்டாட்டங்கள்
குறிப்பாக நாளையதினம்(14) பொங்கல் கொண்டாட்டங்களை மேற்கொள்வதற்கான உணவு பொருட்கள் பானை கரும்பு உள்ளடங்கலான பொருட்களை மக்கள் ஆர்வத்தோடு கொள்வனவு செய்வதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த சில தினங்களாக மன்னார் மாவட்டத்தில் சீரற்ற காலநிலை நிலவி வருகின்ற போதிலும் மக்கள் தை திருநாளை கொண்டாடுவதற்கு தயாராகி வருகின்றனர்.
அத்துடன், கிளிநொச்சி மக்களும் பொங்கலை கொண்டாட தயாராகி வருவதுடன் பொருட்கொள்வனவிலும், புத்தாடை, பழங்கள், கரும்பு உள்ளிட்டவற்றை கொள்வனவு செய்வதிலும் அவர்கள் ஆர்வம்காட்டி வருகின்றனர்.
மேலும், வர்த்தக நடவடிக்கைகள் வழமைக்கு மாறாக அதிகம் இடம்பெற்றதாகவும், பிரத்தியேகமான இடங்களிலும், வீதியோர வியாபாரங்களும் இடம்பெற்றுள்ளன.
வவுனியா
வவுனியாவிலும் தமிழ் மக்கள் தைப்பொங்கல் திருநாளை கொண்டாடுவதற்காக பொங்கல் பானைகள் மற்றும் புத்தாடைகள் பட்டாசுகளை, கரும்புகளை ஆர்வத்துடன் கொள்வனவு செய்வதாக கூறப்படுகிறது.
இதேவேளை கடந்த வருடத்தை விட கடந்த வருடத்தை விட அதிகளவான மக்கள் பொங்கல் பொருட்களை கொள்வனவு செய்வதை அவதானிக்க கூடியதாக உள்ளது.
மலையகம்
தை திருநாளினை கொண்டாடுவதற்கு மலையக மக்களும் இன்று (13) ஆயத்தமாகி வருகின்றனர்.
தைப்பொங்களினை முன்னிட்டு மக்கள் பூசை பொருட்களையும் அத்தியவசிய பொருட்களையும் கொள்வனவு செய்வதற்காக மலையக நகரங்களுக்கு மக்கள் வருகை தந்திருந்தனர்.
சூரிய பொங்கல் வைப்பதற்காக பலர் புதுப்பானையும், பழங்களையும் கொள்வனவு செய்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது, மலையகத்தில் சிவப்பு அரிசிக்கு பல இடங்களில் தட்டுப்பாடு நிலவுவதனால் சில மக்கள் வெள்ளை அரிசியை கொள்வனவு செய்வதாக கூறப்படுகிறது.
மேலும், தேங்காய் உள்ளிட்ட சில பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக மக்கள் பல அசௌகரியங்களுக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |