யாழ். பிரம்படி படுகொலையின் 39வது ஆண்டு நினைவேந்தல்!
யாழ்ப்பாணம் - கொக்குவில், பிரம்படி பகுதியில் இந்திய அமைதிப் படையினரால் நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் 39வது ஆண்டு நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது.
கொக்குவில் பிரம்படியில் அமைந்துள்ள நினைவுத் தூபிக்கு அருகில் நேற்று (11) இந்த நினைவேந்தல் நடைபெற்றது.
இதன்போது படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவுகூர்ந்து சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்
இந்த நினைவேந்தல் நிகழ்வில் சிவகுரு ஆதீன குரு முதல்வர் வேலன் சுவாமிகள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன், யாழ்ப்பாண மாநகர முன்னாள் மேயர் வி. மணிவண்ணன், மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

1987ஆம் ஆண்டு ஒக்டோபர் 11 மற்றும் 12ஆம் திகதிகளில் கொக்குவில் பிரம்படிப் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |