அதிபர் மாளிகை காணி வெளிநாட்டு தனியார் ஒருவருக்கு வழங்கப்பட்டமை தொடர்பில் வாத பிரதிவாதங்கள்
காங்கேசன்துறையில் அமைந்துள்ள அதிபர் மாளிகையை உள்ளடக்கிய காணிகளுள் தனியாருக்கு சொந்தமான காணிகளும் இருக்கிறதா? என வடமாகாண ஆளுநர் பி.எச்.எம். சாள்ஸ் சந்தேகத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று(26) இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கலந்துரையாடலின் போது இணை தலைவராக பங்கேற்ற வடமாகாண ஆளுநர் அதிபர் மாளிகை காணி விவகாரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களை பார்த்து கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிபர் மாளிகை காணி வெளிநாட்டு தனியார் ஒருவருக்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டமை தொடர்பில் வாத பிரதிவாதங்கள் எழுந்துள்ளது.
தனியார் காணிகள்
நிகழ்வில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்த காணியை எவ்வாறு அளவீடு செய்யாமல் வழங்க முடியும் எனக் கேள்வி எழுப்பியதுடன் காணிய இழந்த மக்களுக்கு இழப்பீடு வழங்கிய பின்னரே திட்டங்கள் ஆரம்பிக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதன்போது குறிப்பிட்ட ஆளுநர் குறித்த அதிபர் மாளிகை அமைந்துள்ள பகுதி அரச காணி தானே அதை வழங்குவதற்கு தடை ஏதும் இருக்காது என தெரிவித்துள்ளார் இதன்போது குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், அதிபர் மாளிகை அமைந்துள்ள விடுவிக்கப்படாத பகுதியில் பலருடைய தனியார்காணிகள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
குறுக்கீடு செய்த ஆளுநர் தெல்லிப்பழை பிரதேச செயலாளரை இது தொடர்பில் விளக்கப்படுத்துமாறு கூறியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த தெல்லிப்பழைப் பிரதேச செயலாளர் அதிபர் மாளிகைக்காக 61 ஏக்கர் காணி கேட்கப்பட்ட நிலையில் சுமார் 29 ஏக்கர் கையகப்படுதப்பட்டுள்ளது.
யாழ் அதிபர் மாளிகை தொடர்பான விடயங்கள் எமது பொறுப்பிலிருந்து நிலையில் பொது நிர்வாக அமைச்சின் அறிவுறுத்தலின் பிரகாரம் நகர அபி விருத்தி அதிகாரசபையிடம் ஒப்படைத்து விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.