மன்னாரில் மக்களை தாக்கிய காவல்துறையினர் : யாழில் வெடித்த மற்றுமொரு போராட்டம்

Sri Lanka Police Jaffna Mannar
By Sathangani Sep 29, 2025 04:42 AM GMT
Report

புதிய இணைப்பு

மன்னார் காற்றாலை திட்டத்தை எதிர்த்து மன்னார் மக்கள் ஜனநாயக ரீதியான தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீதும், பங்கு தந்தையர்கள் மீதும் காவல்துறை மேற்கொண்ட தாக்குதலை கண்டித்து வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வெற்றிலைக்கேணி பொதுமக்களால் ஒழுங்கு செய்யப்பட்ட குறித்த போராட்டம் கட்டைக்காடு பங்குத்தந்தை அருட்தந்தை வசந்தன் அடிகளார் தலைமையில் நேற்று (28) இடம்பெற்றது.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் "அநுர அரசே காவல்துறையினரை ஏவி அடக்கு முறையை திணிக்காதே“, “அநுர அரசே கட்டமைக்கப்பட்ட தமிழின அழிப்பை நிறுத்து“, “அருட்பணியாளர்களுக்கு எதிரான அடக்கு முறையை நிறுத்து“, “எமக்காக போராடும் அருட்பணியாளர்களை ஏன் தாக்கினாய்“, “எம் மண்ணை அழித்து எம் சந்ததியை அழிக்கலாம் என்று திட்டம் போடாதே“, “அருட்பணியாளர்களை தாக்க காவல்துறையினருக்கு யார் அதிகாரம் கொடுத்தது" போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

மன்னாரில் மக்களை தாக்கிய காவல்துறையினர் : யாழில் வெடித்த மற்றுமொரு போராட்டம் | Jaffna Protest For L Police Attacked Mannar People

முதலாம் இணைப்பு 

மன்னார் காற்றாலை திட்டத்தை எதிர்த்து மக்கள் எழுப்பிய ஜனநாயக போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீதும் பங்கு தந்தையர்கள் மீதும் காவல்துறை மேற்கொண்ட தாக்குதலை கண்டித்து யாழில் அமைதி வழி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ். வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் பொதுமக்களின் ஒழுங்குபடுத்தலில் இன்று (28) காலை 7:30 மணி அளவில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் மக்களுக்கு பாதிப்பாக அமையக்கூடிய காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மன்னாரில் போராட்டம் தீவிரம் அடைந்துவரும் நிலையில் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் மீது அரச அடக்குமுறை பயன்படுத்தப்படுகிறது.

தமிழகத்தில் தொடரும் பதற்றம்: தவெக கூட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

தமிழகத்தில் தொடரும் பதற்றம்: தவெக கூட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மன்னார் போராட்டத்திற்கு ஆதரவு 

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீதும், அருட் தந்தையர்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்படுவதை கண்டித்தும் மன்னார் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் முகமாக வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள், “அழிக்காதே அழிக்காதே மன்னாரை அழிக்காதே“, “வேண்டாம் வேண்டாம் காற்றாலை திட்டம் வேண்டாம்“,  ”அள்ளாதே அள்ளாதே எமது மண்ணை அள்ளாதே” போன்ற வாசகங்களை ஏந்தி கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மன்னாரில் மக்களை தாக்கிய காவல்துறையினர் : யாழில் வெடித்த மற்றுமொரு போராட்டம் | Jaffna Protest For L Police Attacked Mannar People

இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கட்டைக்காடு பங்கு தந்தை வசந்தன் அடிகளார், “மன்னார் தீவில் எமது மக்களுடைய சாத்வீக போராட்டம் அரசு இயந்திரத்தால் ஒடுக்கப்படுவதை கண்டித்து கட்டைக்காடு பொதுமக்களாக நாங்கள் இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.

மன்னார் எங்களுடைய பூர்வீக சொத்து, அபிவிருத்தி என்னும் பெயரில் மன்னார் மக்கள் பாதிக்கப்படுவதையும் மன்னாருடைய வளங்கள் சூறையாடப்படுவதையும் வன்மையாக கண்டித்து அப்பகுதி மக்கள் சாத்வீகமான போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

ஆனால் இந்த அரசாங்கம் அரசு இயந்திரத்தை பயன்படுத்தி மன்னார் மக்களுடைய சாத்வீக போராட்டத்தை அசிங்கப்படுத்தியுள்ளார்கள். அத்தோடு அப்பாவி மக்கள், அப்பாவி மத குருமார்களை தாக்கி இருக்கிறார்கள்.

உடனடியாக இந்த அராஜகம் நிறுத்தப்பட வேண்டும். பல வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் ஏனைய அரசாங்கங்களை போன்றுதான் செயற்பட எத்தணிக்கின்றார்கள்.

உயிர் பலியெடுத்த தவெக பிரச்சார கூட்டம் : விஜயை நேரடியாக சாடிய உதயநிதி

உயிர் பலியெடுத்த தவெக பிரச்சார கூட்டம் : விஜயை நேரடியாக சாடிய உதயநிதி

அராஜகம் நிறுத்தப்பட வேண்டும்

இன்னும் எமது நாட்டில் இருக்கின்ற பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படவில்லை, அரசியல் கைதிகள் இன்றும் சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள், அத்தோடு எமது மன்னார் தீவின் வளங்களை சூரையாடுவதற்காக திரைமறைவில் பல காய்கள் நகர்த்தப்பட்டு கொண்டிருக்கின்றன. இது சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

உடனடியாக அரசாங்கம் இவ்வாறான தான்தோன்றித்தனமான செயற்பாடுகளை கைவிட்டு எமது தேசத்தில் எமது மக்கள் உரிமையோடும், இறைமையோடும் தங்களுடைய வளங்களை தாங்களே பயன்படுத்தக்கூடிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

மன்னாரில் மக்களை தாக்கிய காவல்துறையினர் : யாழில் வெடித்த மற்றுமொரு போராட்டம் | Jaffna Protest For L Police Attacked Mannar People

இதனை சர்வதேச சமூகம் பாராமுகமாக இருக்காமல் சர்வதேச சமூகத்தின் தலையீட்டுடன் எமது மக்களுடைய உரிமைகள் கிடைக்கப் பெற வேண்டும் என்பதனை வலியுறுத்தி கட்டைக்காடு பொது மக்களாக இன்றைய காலை வேளையில் இந்த சாத்வீகமான போராட்டத்தில் இணைந்து கொண்டிருக்கிறோம்.

அத்தோடு ஏனைய அரசாங்கங்களைப் போன்று இந்த அரசாங்கமும் தமிழ் மக்களை ஒடுக்குகின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது. ஆகவே இவ்வாறான செயற்பாடுகளுக்கு எங்களுக்கு நிரந்தரமான ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்று சொன்னால் சர்வதேச தலையீடு கண்டிப்பாக தேவை என்பதனை மக்கள் தற்போது தெளிவாக புரிய தொடங்கி இருக்கிறார்கள்.

அதேபோன்று மக்களாக குறித்த மன்னார் காற்றாலைக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றபோதும் மக்களின் சாத்வீகமான போராட்டத்தை சிலர் மதச்சாயம் பூச முனைகின்றார்கள்.

அருட்தந்தையர்கள், இந்துக் குருக்கள், முஸ்லிம் மத குருமார்கள் ஆகியோர் இன மத பேதமின்றி கலந்து கொள்கிறார்கள். ஆகவே அரச இயந்திரம் மதச்சாயம் பூசி மக்களின் சாத்வீக போராட்டத்தை சேறு பூச முனையாமல் அவர்களுடைய இறைமை பாதுகாக்கப்பட கொடுத்த வாக்குறுதிகளை உரிய முறையில் நிறைவேற்ற வேண்டும்” என தெரிவித்தார்.

யாழில் மாதா சொரூபத்தில் கண்ணீர் வடியும் காட்சி! காணக் குவியும் மக்கள்

யாழில் மாதா சொரூபத்தில் கண்ணீர் வடியும் காட்சி! காணக் குவியும் மக்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி