யாழ்ப்பாணத்தை ஆக்கிரமிக்கும் வன ஜீவராசிகள் திணைக்களம்: போராட்டத்தில் குதித்த மக்கள் (படங்கள்)

Tamils Jaffna Sri Lanka
By pavan Dec 10, 2023 06:17 AM GMT
Report

யாழ்ப்பாணம் அராலி தொடக்கம் பொன்னாலை வரையான கடற்கரையோரப் பிரதேசத்தையும் பொன்னாலை துருத்திப்பிட்டியையும் சுவீகரிப்பதற்கு வன ஜீவராசிகள் திணைக்களம் எடுத்துள்ள முயற்சியை கைவிட வலியுறுத்தி போரட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

பொன்னாலை சந்தியில் இன்று காலை இடம்பெற்ற இந்தக் கவனயீர்ப்பு போராட்டத்தில் கடற்றொழிலாளர்களும் பொதுமக்களும் பங்கெடுத்துள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் சங்கானை பிரதேச செயலாளர் பிரிவை மையமாக கொண்டு அராலி முதல் பொன்னாலை வரையான கரையோர பகுதியை வனவளப் பாதுகாப்பு திணைக்களத்தின் வளப்பிரதேசமாக ஒதுக்கீடு செய்ய முன்மொழியப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட செயலாளரால் சங்கானை பிரதேச செயலாளருக்கு அண்மையில் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

2024 இல் அரச ஊழியர்களுக்கு விசேட முற்பணம்: வெளியானது சுற்றறிக்கை

2024 இல் அரச ஊழியர்களுக்கு விசேட முற்பணம்: வெளியானது சுற்றறிக்கை

வனவளப் பிரதேசமாக ஒதுக்கீடு

எனினும் ஏறக்குறை 10 கிலோமீற்றர் நீளமான இந்தப் பகுதியில் ஏறக்குறைய 354 ஏக்கர் சுவீகரிக்கப்படவுள்ளதுடன், இதில் 07 மயானங்கள், விளையாட்டுத் திடல்கள், தனியார் காணிகள் மற்றும் விவசாய நிலங்கள் என பொதுமக்கள் பயன்படுத்தும் பகுதிகள் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த பகுதியை வனவளப் பிரதேசமாக ஒதுக்கீடு செய்வதற்கு எதிராக இன்று பொன்னாலை சந்தியில் கவனயீர்ப்பு போராட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தை ஆக்கிரமிக்கும் வன ஜீவராசிகள் திணைக்களம்: போராட்டத்தில் குதித்த மக்கள் (படங்கள்) | Jaffna Protest Today

இதன் போது எமது கடல் எமக்கு வேண்டும், எமது நிலம் எமக்கு வேண்டும், கடலைச் சுவீகரித்து கடற்தொழிலாளர்களை பட்டினிச்சாவிற்குள் தள்ளாதே, எமது கடலை சுவீகரிக்க எவருக்கும் அனுமதியில்லை, ரணில் அரசே எமது கடல் வளத்தை சுவீகரித்து வரலாற்று தவறைச் செய்யாதே, மேச்சல் தரையையும் மயானங்களையும் மாட்டு வண்டி சவாரித் திடல்களையும் சுவீகரிக்கும் திட்டத்தை உடனே கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஏந்தியிருந்தனர். 

யாழ்ப்பாணத்தை ஆக்கிரமிக்கும் வன ஜீவராசிகள் திணைக்களம்: போராட்டத்தில் குதித்த மக்கள் (படங்கள்) | Jaffna Protest Today

இந்தப் போராட்டத்தில் பொன்னாலை தொடக்கம் அராலி வரையுள்ள கடற்றொழிலாளர்கள், அரசியல் கட்சிகளின் சார்பில் சட்டத்தரணி க.சுகாஸ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் 


GalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Scarborough, Canada

24 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Bremen, Germany

21 May, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை, பலெர்மோ, Italy, Brighton, United Kingdom

02 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், திருகோணமலை, Toronto, Canada

29 May, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
18ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர் களபூமி, ஓட்டுமடம், யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சங்கத்தானை

07 Jun, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு

25 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், பொகவந்தலாவை, London, United Kingdom

26 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆத்திமோட்டை, Hayes, United Kingdom

27 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Tooting, United Kingdom

27 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வல்வெட்டி, Ontario, Canada

05 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

26 May, 2015
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020