யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப் புறக்கணிப்பில்
Jaffna Teaching Hospital
Hospitals in Sri Lanka
By Theepan
நாடு தழுவிய ரீதியில் அரச மருத்துவ அதிகாரிகள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்களும் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று(23) காலை 8.00 மணி முதல் 48 மணித்தியால பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் வைத்தியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
நிறைவேற்றத் தவறியமைக்கு எதிர்ப்பு
சுகாதார அமைச்சு வழங்கிய இணக்கப்பாடுகளை நிறைவேற்றத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த பணிப் புறக்கணிப்பு இடம்பெற்றுவருவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக, யாழ்.போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவு இயங்கவில்லை.
அதனால் தொலை தூரங்களிலிருந்து வருகைதந்த நோயாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு திரும்புச் சென்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி