தையிட்டி விகாரையின் காணி பௌத்த நிலமே - பௌத்த காங்கிரஸ் அடாவடி : வெடித்த சர்ச்சை

Sri Lankan Tamils Jaffna SL Protest Buddhism
By Sathangani Oct 18, 2025 05:53 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

யாழ்ப்பாணம் - தையிட்டி திஸ்ஸ விகாரை அமைந்துள்ள பகுதி, தேவநம்பிய மன்னன் காலத்துப் பௌத்த நிலம் எனவும் அது சட்ட விரோதமானது அல்ல எனவும் விகாரைக்கு உரிய காணிகளில்தான் தற்போது குடியிருப்புகள் அமைந்துள்ளன என்றும் இலங்கை பௌத்த காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இலங்கை பௌத்த காங்கிரஸ் வலி. வடக்கு பிரதேசசபைத் தவிசாளர் சுகிர்தனுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தில், ”வரலாற்றுச் சிறப்புமிக்க திஸ்ஸ விகாரை தேவநம்பியதிஸ்ஸ மன்னனின் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டதாக அறிய முடிகின்றது. அது பின்னர் பாழடைந்த நிலைக்குச் சென்றது.

மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் மகிழ்ச்சித் தகவல்

மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் மகிழ்ச்சித் தகவல்

விகாரை கட்டுமானப் பணிகள் 

எனினும், அந்த விகாரை 1950ஆம் ஆண்டுகளில் மீளவும் அமைக்கப்பட்டு 1959ஆம் ஆண்டு வரை முறையாகப் பராமரிக்கப்பட்டது. இதற்கும், முன்னைய காலத்தில் இந்த விகாரை பரந்து விரிந்த பரப்பளவில் அமைந்திருந்தது என்பதற்கு நம்பத்தகுந்த ஆதாரங்கள் தற்போதும் உள்ளன.

1958ஆம் ஆண்டு நில அளவைத் திணைக்களம் வெளியிட்ட வரைபடங்களில் 20 ஏக்கர் பரப்பளவு விகாரைக்காக ஒதுக்கப்பட்டது. விகாரையுடன் பழமையான குளமும் இருந்தது. தற்போது அந்தக் குளம் கோவில் எல்லைக்கு வெளியே அமைந்துள்ளது.

தையிட்டி விகாரையின் காணி பௌத்த நிலமே - பௌத்த காங்கிரஸ் அடாவடி : வெடித்த சர்ச்சை | Jaffna Thaiyiddi Tissa Vihara Is On Buddhist Land

விகாரை கைவிடப்பட்ட நிலைக்குச் சென்றதால், 1971ஆம் ஆண்டின் நகர அபிவிருத்தித் திட்டத்தில் அந்த இடம் கைவிடப்பட்ட விகாரை என்று குறிப்பிடப்பட்டது.

1980ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஏற்பட்ட போர் காரணமாக, அந்தப் பகுதி மக்கள் இடம்பெயர்ந்தனர். இதன்போது, விகாரையும் அதைச்சுற்றியுள்ள ஆறாயிரம் ஏக்கர் நிலப்பரப்பும் உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டன.

2009ஆம் ஆண்டு போர் நிறைவடைந்த பின்னர், 2018ஆம் ஆண்டு விகாரை நிலம் அடையாளம் காணப்பட்டு, திஸ்ஸ விகாரை அமைக்கப்பட்டது. இராணுவத்தின் ஒத்துழைப்புடனேயே கட்டுமானப் பணிகள் இடம்பெற்றன.

அதிகரிக்கும் வருமானம் : இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலாப் பயணிகள்

அதிகரிக்கும் வருமானம் : இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலாப் பயணிகள்

விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை 

2019ஆம் ஆண்டு தொடக்கம் 2025ஆம் ஆண்டுவரை திஸ்ஸ விகாரையில் விரிவான அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 2019ஆம் ஆண்டு அப்போதைய பிரதேசசெயலர் சிவஸ்ரீ விகாரைக் காணிகளில் ஒரு பகுதியை மக்களின் குடியேற்றத்துக்காக வழங்கினார்.

இதனால், 2024ஆம் ஆண்டு, நில அளவைத் துறை மறுமுறை அளவீடு செய்ததில் 14 ஏக்கர் மற்றும் 5.97 பேர்ச் நிலப்பரப்பே விகாரைக்குச் சொந்தமானது என்று உறுதிப்படுத்தப்பட்டது.

தையிட்டி விகாரையின் காணி பௌத்த நிலமே - பௌத்த காங்கிரஸ் அடாவடி : வெடித்த சர்ச்சை | Jaffna Thaiyiddi Tissa Vihara Is On Buddhist Land

இது 1959ஆம் ஆண்டு குறிக்கப்பட்ட நிலப்பரப்பை விட குறைவாக இருந்தாலும், எஞ்சியுள்ள நிலப்பரப்பைப் பாதுகாக்கும் வகையில் தற்போதைய முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சுதந்திரத்துக்குப் பின்னர், வடமாகாணத்தின் முதலாவது தமிழ்ப் பௌத்த பாடசாலை திஸ்ஸ விகாரையை அடிப்படையாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது என்பதைக் கூறிவைக்க விரும்புகின்றோம்.

தற்போது நூற்றுக்கணக்கான மக்கள் திஸ்ஸ விகாரைக்கு வருவதால், அங்கு அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய தேவை உள்ளது. அந்தப் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கோருகின்றோம். அத்துடன், ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து விகாரையைப் பாதுகாத்துத் தருமாறும் கேட்கின்றோம்“ என குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ். வடமராட்சியில் திடீர் சுற்றிவளைப்பு

யாழ். வடமராட்சியில் திடீர் சுற்றிவளைப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom, Scarbrough, Canada

19 Oct, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, வவுனியா, வள்ளிபுனம்

18 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
38ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
மரண அறிவித்தல்

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, Scarborough, Canada

17 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உடுவில், யாழ்ப்பணம், London, United Kingdom

13 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, வைரவபுளியங்குளம்

17 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, காங்கேசன்துறை, கோண்டாவில்

18 Oct, 2021
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, யாழ்ப்பாணம், Scarborough, Canada

16 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
மரண அறிவித்தல்

அளவெட்டி, Wellawatte

15 Oct, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Wembley, United Kingdom

18 Oct, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Toronto, Canada

14 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இன்பர்சிட்டி, London, United Kingdom

17 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சூரியகட்டைக்காடு, நானாட்டான்

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், பேர்லின், Germany

26 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கட்டைப்பிராய்

16 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, சில்லாலை, எசன், Germany

15 Oct, 1995
மரண அறிவித்தல்

Anaipanthy, கொழும்பு, Ilford, London, United Kingdom

10 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025