யாழ்ப்பாணம் - சென்னை இடையே விமான சேவை : வெளியான அறிவிப்பு
Jaffna
Chennai
India
Flight
By Thulsi
8 months ago
சென்னை – யாழ்ப்பாணம் (jaffna) இடையே புதிய விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக இண்டிகோ (Indigo) ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த விமான சேவை செப்டம்பர் 1ம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் (Chennai) இருந்து நாள்தோறும் யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விமான சேவை
தற்போது இந்தியாவின் (india) அலையன்ஸ் ஏர் விமானம் யாழ்ப்பாணத்திற்கு தினசரி விமானத்தை இயக்குகிறது.
இதேவேளை யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை சர்வதேச தரத்திற்கு விரிவுபடுத்துவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கும் யாழ். காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் படகு சேவை சமீபத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

2ம் ஆண்டு நினைவஞ்சலி