ஜனவரி முதல் ஆசிரியர்களுக்கு சம்பள அதிகரிப்பு: அமைச்சரின் அதிரடி அறிவிப்பு
வரவு செலவுத் திட்டங்களுக்கு ஏற்ப ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Sushil Premajayantha) தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் விழிப்புணர்வு நிகழ்வில் கலந்து கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
நியாயமான சம்பள அதிகரிப்பு
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், அரச சேவையில் உள்ள சம்பள முரண்பாடுகள் களையப்பட்டு, 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல், அரச ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 55,000/- ஆக உயர்த்தப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் தயாரித்துள்ள வரவு செலவுத் திட்டங்களுக்கு ஏற்ப தேவையான ஏற்பாடுகளை வழங்கும் முறைகளின் ஊடாக ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிக்கவுள்ளதாக சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இந்த சம்பள அதிகரிப்பு நியாயமானது என அரசாங்கம் கூறுவதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Sushil Premajayantha) வலியுறுத்தினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |