யாழ் நகரில் திடீரென பற்றியெரிந்த வாகனம்! வெளியானது காரணம்
Jaffna
Sri Lanka
Accident
By pavan
யாழ்ப்பாணம் நகரின் மத்திய பகுதியில் வாகனமொன்று இன்றைய தினம் தீக்கிரையாகியுள்ளது.
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கும் ஸ்ரான்லி வீதிக்கும் இடைப்பட்ட உள்ள வெற்று காணி ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனமே தீக்கிரையாகியுள்ளது.
விபத்துக்கு காரணம்
வாகனமொன்றில் ஏற்பட்ட மின்கசிவே விபத்துக்கு காரணம் என தெரியவருகிறது.
யாழ் மாநகர சபையின் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை கட்டுப்படுத்தினர்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |