சீனாவை வடக்கு கிழக்கு மக்கள் எதிர்க்கிறார்கள்! இந்தியா சென்று இடித்துரைத்த சாணக்கியன்

Sri Lanka IMF Sri Lanka China India Northern Province of Sri Lanka
By pavan Feb 26, 2024 05:06 AM GMT
Report

சீனாவினுடைய கடனில் இலங்கை சிக்கியுள்ள போதும் வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் மக்கள், சீனா உள்நுழைவதை தடுத்தே வைத்துள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் வெளி விவகார அமைச்சகத்தின் அழைப்பில் டெல்லியில் நடைபெற்ற றைஸ்னா 2024 டையலொக் (Raisina 2024 Dialogue) 9ஆவது மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், "ஏனைய நாடுகள் QUAD உடன் இணைந்து பணிகளை மேற்கொண்டாலும் இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பிற்கு பாதகமான விடயங்களை மேற்கொள்கின்றனர்.

பிரித்தானியாவிலும் தமிழரசுக் கட்சிக்குள் குழப்பம்!! காரணம் யார் தெரியுமா?

பிரித்தானியாவிலும் தமிழரசுக் கட்சிக்குள் குழப்பம்!! காரணம் யார் தெரியுமா?

அம்பாந்தோட்டை துறைமுகம்

உதாரணமாக இலங்கையில் 2010இல் அமைக்கப்பட்ட அம்பாந்தோட்டை துறைமுகம் 2015 ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் அமைக்கப்பட்ட போட் சிற்றி (Port City) போன்றவற்றை கூறலாம்.

இலங்கையின் கடற்பரப்பில் 2/3 பங்கு வடக்கு கிழக்கிலேயே காணப்படுகின்றது. இது தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களாக காணப்படுகின்றன. இந்த பிரதேசங்களில் சீனாவை வரவேற்பதில்லை.

சீனாவை வடக்கு கிழக்கு மக்கள் எதிர்க்கிறார்கள்! இந்தியா சென்று இடித்துரைத்த சாணக்கியன் | China Debt Trap Sri Lanka Tamil S Against Chinese

மூலோபாய இடங்களான (Strategic Locations) திருகோணமலை போன்ற இடங்களை இன்னும் பாதுகாப்பிற்கு உட்படுத்தாமைக்கான காரணம் அந்த பிரதேசங்களில் இருக்கும் எங்களைப் போன்ற அரசியல் பிரதிநிதிகளே.

QUAD நாடுகளும் எங்களைப் பலப்படுத்த வேண்டும். எங்களுடன் இணைந்து பணி மேற்கொள்வதை அதிகரிக்கும் போதே அது QUAD நாடுகளினுடைய வளர்ச்சிக்கு உதவியாக அமையும்.

உக்ரைன், ரஷ்ய பயணிகள் நாட்டை விட்டு வெளியேற காலக்கெடு : ரணில் பிறப்பித்த உத்தரவு

உக்ரைன், ரஷ்ய பயணிகள் நாட்டை விட்டு வெளியேற காலக்கெடு : ரணில் பிறப்பித்த உத்தரவு

சீனாவின் கடனில் சிக்கிய இலங்கை

இலங்கையில் உள்ள மக்களுக்கு QUAD மேற்கொள்ளும் பணிகளைப் பற்றி விளக்கம் இல்லை. சீனாவினுடைய கடனில் சிக்கியுள்ளது இலங்கை.

இலங்கை மக்களுக்கு சீனாவினுடைய முதலீடு எவ்வளவு பாதகமாக இருந்துள்ளது என்பதனை தெளிவுபடுத்த வேண்டும். இல்லையெனில் சீனா இலங்கைக்கு உதவி செய்கிறது என எம் மக்கள் நினைப்பார்கள்.

சீனாவை வடக்கு கிழக்கு மக்கள் எதிர்க்கிறார்கள்! இந்தியா சென்று இடித்துரைத்த சாணக்கியன் | China Debt Trap Sri Lanka Tamil S Against Chinese

ஆகவே இலங்கையில் வெவ்வேறுபட்ட பணிகளை மேற்கொள்வதற்கு QUAD நாடுகள் முன்வர வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கைக்கு பொருளாதார நெருக்கடி வந்த வேளையில் QUAD நாடாக இருக்கக் கூடிய இந்தியாவே 4 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கி உதவியது என்பதனையும் சாணக்கியன் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த விழாவினுடைய பிரதம அதிதியாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டதுடன், QUAD அமைப்பில் உள்ள அங்கத்துவ நாடுகளான அமெரிக்கா, இந்தியா, அவுஸ்ரேலியா, ஜப்பான் ஆகிய நான்கு நாடுகளும் பங்குபற்றின.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
QUAD என்றால் Quadrilateral Security Dialogue என்று பொருள். அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் இதன் உறுப்பு நாடுகள்.

இந்த நாடுகள் முதலில் கடற்படை பயிற்சிக்காகவே இணைந்தன. அப்பயிற்சிக்கு மலபார் கடற்படை பயிற்சி என்றும் பெயரிட்டனர்.

சீனாவின் ஆதிக்கத்தை தடுப்பது இதன் முக்கிய நோக்கம்.

ReeCha
மரண அறிவித்தல்

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இறக்குவானை, கந்தர்மடம், யாழ்ப்பாணம்

07 Apr, 2025
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, சென்னை, India, Toronto, Canada

03 Apr, 2025
மரண அறிவித்தல்

Karanavai North, சுழிபுரம், London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, வவுனிக்குளம், Toronto, Canada

02 Apr, 2025
மரண அறிவித்தல்

வீமன்காமம் வடக்கு, யாழ்ப்பாணம், பரிஸ், France, Ajax, Canada

03 Apr, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், London, United Kingdom

19 Mar, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

07 Apr, 2022
மரண அறிவித்தல்

தாவடி, கொழும்பு, Toronto, Canada

03 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

London, United Kingdom, Hayling Island, United Kingdom

19 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Kingsbury, United Kingdom

19 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், பரிஸ், France, சூரிச், Switzerland

10 Apr, 2022
கண்ணீர் அஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொழும்பு

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Muscat, Oman, Toronto, Canada

05 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada

05 Apr, 2020
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Bochum, Germany

29 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

05 Apr, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

முனைத்தீவு, New Jersey, United States

02 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Neuss, Germany

06 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
13ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், Bad Marienberg, Germany, Hayes, United Kingdom

31 Mar, 2025