யாழ். பல்கலைக்கழக நூலகமே என்னைப் படைப்பாளியாக்கியது : எழுத்தாளர் தீபச்செல்வன்

Tamils Jaffna University of Jaffna
By Independent Writer Sep 12, 2025 11:09 AM GMT
Independent Writer

Independent Writer

in சமூகம்
Report

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களாக உள்ளவர்களுக்கு மிகப்பெரிய பொறுப்பு இருக்கின்றது எனவும் யாழ். பல்கலைக்கழக நூலகமே என்னைப் படைப்பாளியாக்கியது எனவும் எழுத்தாளர் தீபச்செல்வன் தெரிவித்துள்ளார்.

எழுத்தாளர் தீபச்செல்வனின் சயனைட் நாவல் அறிமுக விழா நேற்று (11.09.2025) யாழ். பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற போது ஏற்புரையினை ஆற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,  ”அன்றைய போர்க்கால பல்கலைக்கழக சூழலும், எங்களைச் சுற்றியிருந்த போராட்டங்களுமே என்னை செழுமையாக்கியது.

கொழும்பில் மகிந்தவுக்கு ரணில் வழங்கியுள்ள 400 மில்லியன் மதிப்புள்ள வீடு!

கொழும்பில் மகிந்தவுக்கு ரணில் வழங்கியுள்ள 400 மில்லியன் மதிப்புள்ள வீடு!

முன்னாள் போராளியின் வாழ்க்கை

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களாக, மாணவத் தலைவர்களாக உள்ளவர்களுக்கு மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது. பல்கலைக்கழக படிப்பு முடிந்த பின்பு எங்காவது அரச திணைக்களம் ஒன்றிற்கு அபிவிருத்தி உத்தியோகத்தராக வேலைக்கு போகிறோம், கையொப்பத்தை இடுகிறோம்.

வேலையோடு முடங்கிப் போகிற வேறு எதைப் பற்றியும் சிந்திக்காதவர்களாக நீங்கள் வந்துவிடக் கூடாது என்பது எனது அழுத்தமான கோரிக்கை. இப்படியான ஒரு வாழ்க்கையை நீங்கள் வாழ இந்தப் பல்கலைக்கழகம் கட்டப்படவில்லை.

யாழ். பல்கலைக்கழக நூலகமே என்னைப் படைப்பாளியாக்கியது : எழுத்தாளர் தீபச்செல்வன் | Jaffna Uni Library Made Me A Creator Theepachelvan

ஒவ்வொரு தனிநபர்களும் உங்களை ஆளுமை மிக்கவர்களாக மாற்றிக் கொள்வீர்களாக இருந்தால் தொழில் முனைவோராக, படைப்புத் துறை சார்ந்தோராக, ஊடகத்துறை சார்ந்தோராக, கல்வித் துறை சார்ந்தவராக இருக்கலாம்.

நாங்கள் முன்னேறுவதற்கும் முகவரி சொல்வதற்கும் நாங்களே இந்த தேசத்தை ஆள்வதற்கும் பல துறைகள் இருக்கின்றன. வெறுமனே முன்னாள் போராளியின் வாழ்க்கைப் போராட்டம் சார்ந்த கதையை உங்கள் கைகளில் தரவில்லை.

இந்தக் கதையின் வாயிலாக நீங்கள் இந்த தேசத்தில் ஆற்ற வேண்டிய சேவையினுடைய கோரிக்கைக்கான விண்ணப்பத்தைத் தான் உங்களுடைய கைகளில் தந்திருக்கிறேன்.

மன்னார் காற்றாலை விவகாரம்: ஜனாதிபதிக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

மன்னார் காற்றாலை விவகாரம்: ஜனாதிபதிக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

அவல வாழ்வு

2009 இல் எமது இனத்தை பெருமளவுக்கு இனப்படுகொலை செய்து எங்களுடைய சமூகத்தை ஊமைகளாக்கி விட்டிருந்தார்கள். ஆனால் இன்றைக்கு எங்களுடைய சமூகம் இயல்பாகவே ஊமைகளாகி ஆகக்குறைந்த மனிதப் பண்பும் இல்லாத சமூகமாக நாங்கள் மாறிக் கொண்டிருக்கின்றோம்.

மிக நூதனமாக இனவழிப்பும், இன ஒடுக்குமுறையும் கட்டவிழ்த்து விடப்படுகின்ற இலங்கைத்தீவில் எங்கள் இருப்பை இல்லாமல் செய்யும் முயற்சிகள் தொடர்ந்தும் நடக்கிறது.

ஆயிரமாயிரம் எங்கள் வீரமறவர்களை மண்ணுக்குள் புதைத்திருக்கிறோம். அதற்காகவே எங்களுடைய அண்ணன்களும் அக்காக்களும் சயனைட்டுகளை தங்கள் கழுத்துகளில் கட்டிக் கொண்டார்கள். அப்படிக் கட்டிக் கொண்ட ஒரு மாவீரனின் கதையே இது.

யாழ். பல்கலைக்கழக நூலகமே என்னைப் படைப்பாளியாக்கியது : எழுத்தாளர் தீபச்செல்வன் | Jaffna Uni Library Made Me A Creator Theepachelvan

அப்படிக் கட்டிக் கொண்டவர்கள் இன்று நடைப்பிணங்களாக, பிச்சைக்காரர்களாக, கைவிடப்பட்ட மனிதர்களாக அவல வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நான் இந்த பல்கலைக்கழக நூலகத்திலே அதிக நேரங்களை செலவிட்டிருக்கிறேன். நான் இன்று படைப்பாளியாக மாறி எழுதுகிறேன் என்றால் அதற்கு பல்கலைக்கழக நூலகமே காரணம்.

கைலாசபதி அரங்கில் தான் நான் மேடைப் பேச்சு பழகினேன். அந்த மகத்துவம் இந்தப் பல்கலைக்கழகத்தில் இருக்கிறது. ஒவ்வொரு முறையும் இந்தப் பல்கலைக்கழகத்துக்குள் காலடி எடுத்து வைக்கும் போது இதயமெல்லாம் ஈரமாகுவதனை உணர்ந்திருக்கிறேன்" என தெரிவித்தார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வுக்கு கலைப்பீடாதிபதி எஸ். ரகுராம் தலைமை தாங்கினார்.

இந்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக ஐபிசி தமிழ் மற்றும் றீச்சா நிறுவனங்களின் தலைவர் கந்தையா பாஸ்கரன் கலந்து சிறப்பித்திருந்தார்.

யாழ். பல்கலைக்கழக தமிழியல் நூலகத்துக்கு சயனைட் நாவல் அன்பளிப்பாக வழங்கப்பட்டதை தொடர்ந்து, குறித்த நாவலினை நூறு மாணவர்களுக்கு  கந்தையா பாஸ்கரன் இலவசமாக வழங்கி வைத்தார்.

கொழும்பில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் : மூடப்பட்ட லோட்டஸ் வீதி

கொழும்பில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் : மூடப்பட்ட லோட்டஸ் வீதி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Toronto, Canada

24 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வன்னிவிளாங்குளம், மல்லாவி, வவுனியா, Scarborough, Canada

11 Nov, 2020
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Frauenfeld, Switzerland

12 Oct, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, கன்பெறா, Australia, சிட்னி, Australia

11 Nov, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Den Helder, Netherlands

09 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, London, United Kingdom, Paris, France

02 Nov, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
மரண அறிவித்தல்

புத்தளம், Frankfurt, Germany

06 Nov, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

Columbuthurai, கொக்குவில், கொழும்பு, Mitcham, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Bielefeld, Germany

18 Sep, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, மெல்போன், Australia

12 Nov, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், Vancouver, Canada

22 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, முல்லைத்தீவு

11 Nov, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

11 Nov, 2014
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

08 Nov, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, Rorschach, Switzerland

06 Nov, 2025
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024