யாழ் பல்கலையின் பட்டமளிப்பு தொடர்பில் வெளிவந்த தகவல்
jaffna university
press meet
35th convocation
By Vanan
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி திட்டமிட்டவாறு எதிர்வரும் 07 ஆம் திகதி நிகழ்நிலை வாயிலாக நடைபெறும் என யாழ். பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாக் குழுத் தலைவரும், கலைப் பீடாதிபதியுமான கலாநிதி கே.சுதாகர் தெரிவித்தார்.
துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இன்று இடம்பெற்ற பட்டமளிப்பு விழாக்குழுவின் விசேட கூட்டத்தின் முடிவில் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் குறிப்பிட்டார்.
எனினும் பட்டமளிப்பு விழாவை, நிகழ்நிலை வாயிலாக நடத்துவதற்கு பல்கலைகழக மாணவர்கள் ஒன்றியம் தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்த நிலையில், யாழ். பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாக் குழுத் தலைவரின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.