50 ஆண்டுகளை நிறைவு செய்த யாழ்ப்பாண பல்கலைக்கழகம்

Sri Lankan Tamils Tamils University of Jaffna
By Shalini Balachandran Oct 06, 2025 11:22 AM GMT
Report

யாழ்ப்பாண பல்கலைக்கழகம் (University of Jaffna) ஆரம்பிக்கப்பட்டு 50 ஆண்டுகள் கடந்த நிலையில் பொன் விழா நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிகழ்வு இன்று (06) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஈழத் தமிழர்களின் தனிப்பெரும் அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஸ்தாபிக்கப்பட்டு ஐம்பது ஆண்டுகளை நிறைவு செய்து, இன்று பொன்னகவைப் பெருவிழா காண்கிறது.

ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட இலங்கையின் தீர்மானம்

ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட இலங்கையின் தீர்மானம்

உயர்கல்வி 

இலங்கை பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண வளாகமாக 1974 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் ஆறாம் நாள் ஆரம்பிக்கப்பட்ட இவ் உயர்கல்வி நிலையம், இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமாக வியாபித்து நிற்கின்றது.

50 ஆண்டுகளை நிறைவு செய்த யாழ்ப்பாண பல்கலைக்கழகம் | Jaffna University Celebrates 50Th Golden Jubilee

ஐம்பதாவது ஆண்டைக் கடந்திருக்கும் இப்பல்கலைக்கழகத்தின் பன்னிரண்டு பீடங்களும் இணைந்து பொன்விழா நிகழ்வை இன்று ஆறாம் திகதி வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டுள்ளது.

விஜயின் கைது: விஜய்காந்த் மனைவியின் நேரடி சவால் - திக்குமுக்காடும் தமிழக அரசு

விஜயின் கைது: விஜய்காந்த் மனைவியின் நேரடி சவால் - திக்குமுக்காடும் தமிழக அரசு

பொன் விழா

இந்தநிலையில், காலை 09.00 மணிக்கு ஆரம்பமான பொன் விழா நிகழ்வில் இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கபில செனிவிரத்ன பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டுள்ளார்.

50 ஆண்டுகளை நிறைவு செய்த யாழ்ப்பாண பல்கலைக்கழகம் | Jaffna University Celebrates 50Th Golden Jubilee

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கே. எல். வசந்தகுமார ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டுள்ளனர்.

பல்கலைக்கழகத்தின் ஐம்பது வருடகால கல்விப் பணி வரலாற்றை எடுத்தியம்பும் வகையில் அமைந்த வரலாற்றுப் பொக்கிஷமான “யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பொன் அகவை வரலாறு” எனும் நூலும் மற்றும் பல்கலைக்கழகத்தின் பொன்னகவையை நினைவு கூரும் வகையிலான நினைவு முத்திரை வெளியீடும் இந் நிகழ்வில் சிறப்பாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.  

மன்னாருக்கு காற்றாலை ஏன் பொருத்தமில்லை... அம்பலமான உண்மைகள்

மன்னாருக்கு காற்றாலை ஏன் பொருத்தமில்லை... அம்பலமான உண்மைகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026