யாழ். பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம் (படங்கள்)
Sri Lanka Economic Crisis
University of Jaffna
SL Protest
Sri Lanka Anti-Govt Protest
By Vanan
யாழ். பல்கலைக்கழகத்தில் நேற்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
அரசாங்கத்தினுடைய நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் இக்கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கவனயீர்ப்பு போராட்டம்

யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் எற்பாட்டில் நண்பகல் 12 மணியளவில் இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
பல்கலைக்கழக ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஒன்றுகூடி இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாட்டை கொள்ளை அடிக்காதே

இந்தப் போராட்டத்தில் மக்களுடைய போராட்டத்துக்கு மதிப்பளி, நாட்டை கொள்ளை அடிக்காதே, ஏழைகளின் வயிற்றில் அடிக்காதே, காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வழங்கு போன்ற பதாகைகளை ஏந்தியவாறு விரிவுரையாளர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி