யாழில் வெடித்த மாணவர்கள் போராட்டம் : இடைமறித்த காவல்துறையினரால் பதற்றம்
புதிய இணைப்பு
யாழ்ப்பாண பல்கலைக்கழக (University of Jaffna ) இணைந்த சுகாதார விஞ்ஞான பீட மாணவர்களினால் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டத்தை காவல்துறையினர் இடைமறித்துள்ளதால் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
இந்தநிலையில், ஆர்ப்பாட்டத்தை நடத்த வேண்டாம் என வலியுறுத்திய காவல்துறையினர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இருந்து ஆரம்பித்த பேரணியை தடுத்து நிறுத்த முற்பட்டுள்ளனர்.
இருப்பினும், ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னோக்கி சென்றுள்ள நிலையில் தற்போது இடை மறிக்கப்பட்டுள்ளனர்.
செய்திகள் - கஜிந்தன்
உள்ளூராட்சி தேர்தல்
உள்ளூராட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பேரணிகள் மற்றும் ஊர்வலங்கள் நடத்துவதற்கு தேர்தல் சட்டத்தின் படி தடை செய்யப்பட்டுள்ள நிலையில் காவலதுறையினர் தற்போது பல்கலைக்கழக மாணவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த பேரணிக்கு நீதிமன்றம் ஊடாக தடையுத்தரவு பெறும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்களால் ஆர்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டம் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய இணை சுகாதார விஞ்ஞான பீட மாணவர்களால் இன்று (26) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலவசக் கல்வியால் உருவான இணை மருத்துவ விஞ்ஞான பட்டதாரிகளை தவிர்த்து, தனியார் பல்கலைக்கழகங்கள் மூலம் பட்டம் பெற்றவர்களை அரசுத்தொழிலில் இணைப்பதை அரசியல் தலைமைகள் கைவிட வேண்டும் என வலியுருத்தி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலவசக் கல்வி
அத்தோடு, இலவசக் கல்வியை பாதுகாக்க வேண்டும் எனவும் இலவசக் கல்வியால் உருவாகும் அரசுப் பல்கலைக்கழகங்களில் உள்ள அனைத்து இணை மருத்துவ விஞ்ஞான பட்டதாரிகளும் அரசுத்தொழிலுக்கு உடனடியாக இணைக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புதிய அரசாங்கமும் பழைய வழியிலேயே செல்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன் இலவசக் கல்வியை அழித்து, தனியார் பல்கலைக்கழகங்களை ஊக்குவிக்கும் இந்த ஒழுங்கற்ற தேர்வு முறையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என மாணவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகள் - கஜிந்தன்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |










பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 3 நாட்கள் முன்
