யாழ். பல்கலை கறுப்புக்கொடி போராட்ட விசாரணை! தமிழர் தரப்பு கேள்வி

Sri Lankan Tamils University of Jaffna Sri Lankan Peoples
By Dhilak Feb 13, 2026 10:37 AM GMT
Report

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கறுப்புக்கொடி போராட்டத்தை சட்டவிரோதமானது என அறிவித்துள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கருத்து பிழையானது என்று தெரிவித்துள்ள ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, போராட்டத்திற்கான காரணத்தைக் கண்டறிந்து அதனைத் தீர்ப்பதற்கு முயற்சிக்க வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளது.

இது குறித்து ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

வெடுக்குநாறி மலை சிவராத்திரி வழிபாடு விவகாரம்: ரவிகரன் எம்.பி அழுத்தம்

வெடுக்குநாறி மலை சிவராத்திரி வழிபாடு விவகாரம்: ரவிகரன் எம்.பி அழுத்தம்


இலங்கையின் அடிப்படை உரிமைகள்

இலங்கை சுதந்திரம் அடைந்ததிலிருந்து மிக நீண்டகாலமாக சுதந்திர தினத்தையும் அதற்குப் பின்னர் 1972ஆம் ஆண்டு இலங்கை குடியரசாகிய போது கொண்டுவரப்பட்ட குடியரசு அரசியல் சாசனத்திற்கு எதிராகவும் தமிழ் மக்கள் கறுப்புக்கொடி போராட்டங்களை முன்னெடுத்து வந்துள்ளதுடன் அவற்றை கரிநாட்களாகவும் பிரகடனப்படுத்தி வந்துள்ளனர்.

யாழ். பல்கலை கறுப்புக்கொடி போராட்ட விசாரணை! தமிழர் தரப்பு கேள்வி | Jaffna University Students Black Flag Protest

இலங்கை என்பது சிங்கள, தமிழ் ராசதானிகளாக பிளவுபட்டு இருந்ததென்பதும் 1883ஆம் ஆண்டு காலனித்துவ ஆட்சியாளர்களான பிரித்தானியர்களால் தமது நிர்வாக வசதிக்காக ஒன்றாக்கப்பட்டது என்பதுதான் வரலாறு. 

ஒன்றிணைத்த ராசதானிகளை சிலோன் என்ற பெயரில் சூழ்ச்சியின் காரணமாக பெரும்பான்மையினமான சிங்கள தரப்பிடம் கையளித்து விட்டுச் சென்றார்கள் என்பதும் வரலாறு.

ஆகவே, இவ்வாறான சுதந்திர தினத்தையோஅல்லது குடியரசு தினத்தையோ தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுடன் பெரும்பான்மை சிங்கள அரசுகளால் தமிழ் மக்களின் மொழியுரிமை, வாழ்விட உரிமை, கல்வி உரிமை, வேலைவாய்ப்புக்கான உரிமை போன்றவை பல்வேறு வழிகளில் நிராகரிக்கப்பட்டு தமது சுதந்திரத்தை தாமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிலைக்கு தமிழ் மக்கள் தள்ளப்பட்டதன் காரணமாகத்தான் இங்கு நீண்டதோர் ஆயுதப்போராட்டமே நடைபெற்றது.

எனவே, தமிழ் மக்கள் ஏன் போராடுகிறார்கள்? அரசாங்கத்தின் தமிழர்களுக்கு எதிரான அனைத்துச் செயற்பாடுகளையும் ஏன் எதிர்க்கிறார்கள்? ஏன் கறுப்புக்கொடி ஏற்றுகிறார்கள்? ஏன் ஊர்வலங்களைம் கவனயீர்ப்புப் போராட்டங்களையும் நடாத்துகிறார்கள்? என்பதற்கு அரசாங்கம் சரியான தீர்வைக் கண்டுகொள்ள வேண்டுமே தவிர, ஜனநாயகபூர்வமான எதிர்ப்பைக் காட்டும் மக்களையோ மாணவர்களையோ தண்டிப்பதானது ஜனநாயக விரோதமானதும் சட்டவிரோதமானதுமாகும்.

இலங்கையின் அடிப்படை உரிமைகளில் பேச்சுரிமை, எழுத்துரிமை, ஒன்றுகூடுவதற்கான உரிமை, ஜனநாயக வழிமுறைகளில் கறுப்புக்கொடி ஏற்றுதல் உட்பட எதிர்ப்புத் தெரிவிப்பதற்கான உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. 

கறுப்பு கொடி

இலங்கையில் துக்கத்தை வெளிப்படுத்துவதற்கு கறுப்புக்கொடி ஏற்றுவது இயல்பானது. தமிழ் மக்கள் அடக்கப்பட்டு ஒடுக்கப்படுகிறார்கள் என்பதும் தமிழ் மக்களுக்கு முழுமையான சுதந்திரம் கிடைக்கவில்லை என்பதும் துக்ககரமான செயற்பாடே. 

யாழ். பல்கலை கறுப்புக்கொடி போராட்ட விசாரணை! தமிழர் தரப்பு கேள்வி | Jaffna University Students Black Flag Protest

அவ்வாறான துக்ககரமான செயற்பாட்டின்போது பல்கலைக்கழகத்திலோ அல்லது வேறு எந்த இடத்திலோ கறுப்பு கொடி கட்டுவது சட்டவிரோதம் என சட்டத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. 

மக்களுக்கோ அன்றில் சொத்துக்களுக்கோ எவ்வித இடையூறும் விளைவிக்காமல் மக்கள் தமது எதிர்ப்பைக் காட்டுவது என்பது ஜனநாயகபூர்வமான நடவடிக்கையே.

கடந்த 04ஆம் திகதி யாழ் பல்கலைக்கழத்தில் கறுப்புக்கொடி ஏற்றிய மாணவர்களுக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என பல்கலைக்கழக மானிய ஆணைக்கழகம் கோருவதும் அதனை பல்கலைக்கழக நிர்வாகம் ஏற்பதும் சட்டவிரோதமானதுடன் ஜனநாயக விரோதமானதுமாகும் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி கருதுகின்றது.

மாணவர்களின் அடிப்படை உரிமைகளிலோ ஜனநாயக வழிமுறையிலான போராட்டங்களிலோ தலையீடு செய்யாமல் அவர்கள் சுதந்திரமாகவும் அச்சவுணர்வின்றியும் தமது கல்வியைத் தொடர பல்கலைக்கழக ஆசிரிய சமூகம் அதற்கான பொதுவெளியை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றோம்.

பல்வேறுபட்ட மாணவர் போராட்டத்தை நடாத்தி மிகப் பிரமாண்டமான அரகலய போராட்டத்தின் மூலம் ஆட்சிக்கு வந்தவர்கள் தமிழ் மாணவர்களின் ஜனநாயக பூர்வமான போராட்டங்களை நசுக்குவதோ அன்றி அவர்களைத் தண்டிப்பதோ சரியானதா என்பதை ஆட்சியிலிருப்பவர்கள் சிந்திக்க வேண்டும்.

வெளிநாட்டு மோகம் காட்டி லட்சக்கணக்கில் மோசடி! சிக்கிய இளைஞர்கள்

வெளிநாட்டு மோகம் காட்டி லட்சக்கணக்கில் மோசடி! சிக்கிய இளைஞர்கள்

இளைஞர்களுக்கு பகுதி நேர வேலைவாய்ப்பு - அரசாங்கத்தின் மகிழ்ச்சித் தகவல்

இளைஞர்களுக்கு பகுதி நேர வேலைவாய்ப்பு - அரசாங்கத்தின் மகிழ்ச்சித் தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...    
ReeCha
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022