இம்மாத இறுதியில் வலி. வடக்கு காணி விடுவிப்பு சாத்தியம் : அரச தரப்பின் அறிவிப்பு

Sri Lanka Army Jaffna Anura Kumara Dissanayaka Ramalingam Chandrasekar
By Theepan Sep 03, 2026 05:40 AM GMT
Report

யாழ்ப்பாணம் - வலி வடக்கு பகுதியில் விடுவிக்கப்படாத மக்களுடைய காணிகளின் ஒரு தொகுதியினை இம்மாத இறுதியில் விடுவிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் இடம்பெற்று வருவதாக கடற்றொழில் அமைச்சரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் காணி விடுவிப்பு தொடர்பாக, பாதுகாப்பு உயர் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்த நிலையில் எப்போது காணி விடுவிப்பு சாத்தியம் என அவரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், காணி விடுவிப்பு தொடர்பில் எமது அரசாங்கம் ஏற்கனவே கூறிய வாக்குறுதியான மக்களின் காணி மக்களுக்கே என்ற நிலைப்பாட்டில் தொடர்ந்து பயணித்து வருகிறது.

கொழும்பு வாழ் மக்களுக்கான முக்கிய அறிவித்தல்

கொழும்பு வாழ் மக்களுக்கான முக்கிய அறிவித்தல்

 

 பாதுகாப்பு உயர் கூட்டம்

அண்மையில் ஜனாதிபதி அநுர தலைமையில இடம்பெற்ற பாதுகாப்பு உயர் கூட்டத்தில் வலி.வடக்கு பகுதியிலுள்ள விடுவிக்கப்படாத காணிகள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு பாதுகாப்பு உயர் அதிகாரிகளுக்கு உத்தரவு வழங்கியிருந்தார்.

அதன் அடிப்படையில் பாதுகாப்பு தரப்பினரிடம் உள்ள பொது மக்களின் காணிகளை படிப்படியாக விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இம்மாத இறுதியில் வலி. வடக்கு காணி விடுவிப்பு சாத்தியம் : அரச தரப்பின் அறிவிப்பு | Jaffna Vali North Land Release Possible This Month

செப்டம்பர் மாத இறுதி பகுதியில் வலி வடக்கு பகுதியில் உள்ள ஒரு தொகுதி காணிகளை மக்களிடம் கையளிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

எமது அரசாங்கம் பொறுப்பேற்றதன் பின் நாட்டில் ஊழல் கலாச்சாரம், போதை ஒழிப்பு போன்ற விடயங்களை கடந்த காலங்களை விட கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம்.

நாட்டை அழிவு பாதையில் கொண்டு சென்ற ஒரு கூட்டத்தை நாட்டு மக்கள் விரட்டியடித்துள்ள நிலையில் மீண்டும் அந்தக் கூட்டம் நாட்டை குழப்புவதற்கு எத்தனித்துக் கொண்டிருக்கிறது.

அரச ஊடகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட யாழ். ஊடகவியலாளர் - யாழ். ஊடக அமையத் தலைவர் விசனம்

அரச ஊடகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட யாழ். ஊடகவியலாளர் - யாழ். ஊடக அமையத் தலைவர் விசனம்

போராட்டங்களை நடத்துகின்றனர்

நாட்டை குழப்பும் நடவடிக்கையில் மக்களால் துரத்தப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவர்களிடம் ஆசி பெற்ற போதைப் பொருள் பின்னணியில் செயற்படுபவர்களும் குழப்பம் விளைவிக்கும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நாங்காள் அவற்றை கண்டு அஞ்சப்போவதில்லை. மக்கள் அளித்த ஆணையை பொறுப்பேற்ற எமது தோழர் அநுரகுமார மக்களின் தோழராக எந்த சவாலையும் வெற்றி கொள்ளும் தலைவனாக செயற்பட்டு வருகிறார்.

இம்மாத இறுதியில் வலி. வடக்கு காணி விடுவிப்பு சாத்தியம் : அரச தரப்பின் அறிவிப்பு | Jaffna Vali North Land Release Possible This Month

நாட்டு மக்கள் தெளிவாக இருக்க வேண்டும் ஆட்சி அதிகாரத்தை இழந்த கும்பல் நாட்டை மீண்டும் அதல பாதாளத்துக்கு கொண்டு செல்வதற்காக மக்களை இனவாத நீதியாக தூண்டிவிடும் செயற்பாடுகளில் ஈடுபடுவார்கள். இந்த செயற்பாடுகளில் தமிழ் அரசியல்வாதிகளும் விதிவிலக்கு அல்ல.

மக்களின் காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதி உத்தரவு வழங்கிய பின்னரும் தமது அரசியல் சுயலாபங்களுக்காக மக்களை அழைத்து போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

மழையுடனான வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

மழையுடனான வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் போராட்டம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பங்கு பற்றிய நல்லாட்சி அரசாங்கத்தில் காணி விடுவிப்பு தொடர்பில் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவுக்கு எதிராக போராட்டம் நடத்த முடியாது என கூறினார்கள்.

அவ்வாறு போராட்டம் நடாத்தினால் நல்லாட்சி அரசாங்கம் குழப்பி விடும் என கூறிய தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என தங்களைத் தாங்கள் கூறுபவர்கள் தற்போது காணி விடுவிப்பு தொடர்பில் கொழும்பு ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் தொடர் போராட்டம் நடாத்தப் போகிறோம் என கூறுகிறார்கள்.

இம்மாத இறுதியில் வலி. வடக்கு காணி விடுவிப்பு சாத்தியம் : அரச தரப்பின் அறிவிப்பு | Jaffna Vali North Land Release Possible This Month

இது அவர்களின் வங்குரோத்து அரசியலின் வெளிப்பாடாகவே பார்க்க முடியும் மக்கள் மீது கரிசனை கொண்டவர்கள் அல்ல. மக்களால் கொண்டுவரப்பட்ட இந்த ஆட்சியை மக்கள் தான் பாதுகாக்க வேண்டும் நாட்டு மக்களுக்கு எதிரான சூழ்ச்சிகளை மக்களால் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும் இல்லையேல் மீண்டும் நாடு இருண்ட யுகத்தை நோக்கி தள்ளப்படும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

ஆகவே காணி விடுவிப்பு மற்றும் ஏனைய மக்கள் நலன் சார்ந்த திட்டங்களில் நாம் அக்கறையுடன் செயற்பட்டு வரும் நிலையில் சில தாமதங்கள் ஏற்பட்டாலும் அதனை உரிய முறையில் நிறைவேற்றுவோம்“ என அவர் மேலும் தெரிவித்தார்.

எல்-நினோவினால் தொழில் இழந்தவர்களுக்கு நிவாரணம் : அரசாங்கம் அறிவிப்பு

எல்-நினோவினால் தொழில் இழந்தவர்களுக்கு நிவாரணம் : அரசாங்கம் அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024