ஈரான் போர் தொடர்பில் இஸ்ரேலுக்கு ட்ரம்ப் கூறிய விடயம்!
ஈரானுடனான போர் மீண்டும் தொடங்குவது குறித்து இஸ்ரேல் கவலைப்படத் தேவையில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள நேர்காணலிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
தொலைபேசி வழியிலான அந்த நேர்காணலின் போது பேசிய ட்ரம்ப், "நான் ஜனாதிபதியாக இருக்கிறேன், அதை நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று கூறியதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மிகப்பெரிய பலத்துடன் பதிலடி
அடுத்த வாரம் தொடங்கும் யூதப் பண்டிகைக் காலத்தில் ஈரான் தங்களைத் தாக்கினால், அதற்கு மிகப்பெரிய பலத்துடன் பதிலடி கொடுக்கத் தயாராக இருப்பதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் முன்னதாகத் தெரிவித்திருந்த நிலையில், ட்ரம்பின் இந்தக் கருத்து வெளிவந்துள்ளது.

இந்நிலையில், ஈரானுடன் மீண்டும் மூண்டுள்ள மோதல்கள் அதிக காலம் நீடிக்காது என ட்ரம்ப் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |