ஈரானுடனான மோதல் தொடர்பில் ட்ரம்ப் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு
ஈரானுடன் மீண்டும் மூண்டுள்ள மோதல்கள் அதிக காலம் நீடிக்காது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இரு தரப்பிற்கும் இடையே அண்மையில் இடம்பெற்ற மோதல்களைத் தொடர்ந்து, உலகின் முக்கிய எரிபொருள் போக்குவரத்துப் பாதையான ஹோர்முஸ் நீரிணை முழுமையான கட்டுப்பாடு தற்போது அமெரிக்காவின் வசமே உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாடு
செய்தியாளர் சந்திப்பில் பேசிய ட்ரம்ப், "ஹோர்முஸ் நீரிணையை நாங்கள் எங்கள் முழு கட்டுப்பாட்டில் வைத்துள்ளோம். ஒவ்வொரு நாளும் மில்லியன் கணக்கான பீப்பாய்கள் எண்ணெய் ஏற்றிய பல கப்பல்களை நாங்கள் அப்பகுதி வழியாக பாதுகாப்பாக இயக்கி வருகிறோம்.

Image Credit: abcnews
பெரும்பாலான நேரங்களில் எந்த தடங்கலுமின்றி இப்பணியை மேற்கொள்கிறோம்.
எப்போதாவது அவர்கள் ஒரு ட்ரோனை அனுப்பும்போது, நாங்கள் அதை சுட்டு வீழ்த்துகிறோம். அங்கு மிகவும் வலுவான கட்டுப்பாட்டை நாங்கள் நிறுவியுள்ளோம்," எனத் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |