யாழில் முற்றாக விடுவிக்கப்பட்ட காணிகள்
                                    
                    Sri Lanka Army
                
                                                
                    Jaffna
                
                                                
                    Sri Lanka
                
                        
        
            
                
                By Shalini Balachandran
            
            
                
                
            
        
    யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் மூன்றாவது இராணுவ முகாமும் முற்றாக விடுவிக்கப்பட்டு காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசங்களில் காணி விடுவிப்பானது கடந்த 10 ஆம் திகதி அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த நடவடிக்கையானது இன்று(27) இடம்பெற்றுள்ளது.
விடுவிக்கப்பட்ட காணிகள்
இதன்படி வறுத்தலைவிளான் (J/241)கிராம சேவையாளர் பிரிவில் சிறிலங்கா லைற் இன்பினிற்ரி படைப்பிரிவினர் கொண்டிருந்த 21 குடும்பங்களுக்குச் சொந்தமான 23.36 ஏக்கர் காணி முற்றாக விடுவிக்கப்பட்டுள்ளது.

இதன்பிரகாரம் முழுமையாக விடுவிக்கப்பட்ட கிராம சேவையாள் பிரிவாக வறுத்தலைவிளான் கிராம அலுவலர் பிரிவும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 

                                        
                                                                                                                        
    
                                
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்