வட மத்திய மாகாண சபைக்கு செயலாளராக யாழ். பெண் நியமனம்
Tamils
Jaffna
Sri Lanka
By Shalini Balachandran
வட மத்திய மாகாண சபைக்கு முதலாவது தமிழ் பெண் செயலாளராக யாழ். பெண்ணொருவர் பொறுபேற்றுள்ளார்.
யாழை சேர்ந்த நிர்வாக சேவை அதிகாரியான சுபாஜினி மதியழகனே இவ்வாறு பதவியேற்றுள்ளார்.
இந்தநிலையில், நேற்று (14) அவர் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
நிர்வாக சேவை
யாழ்ப்பாணம் - சண்டிலிப்பாய் பிரதேச செயலாளராக கடமையாற்றிய சுபாஜினி நிர்வாக சேவை சிறப்பு தரத்துக்கு பதவி உயர்வு பெற்ற நிலையில் வட மத்திய மாகாண சபைக்கு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு நியமனம் பெற்ற அவருக்கு பல்வேறு தரப்பினரும் தமது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

