யாழ்ப்பாண இளைஞர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
போலி ஆவணங்களை பயன்படுத்தி ஐரோப்பாவிற்கு செல்ல முயன்றவேளை இவர்கள் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலி ஆவணங்களை பயன்படுத்தி

இன்று காலை ஐந்து இளைஞர்கள் ஐரோப்பாவிற்கு செல்ல முயன்றவேளை, அவர்கள் வைத்திருந்த ஆவணங்களை பரிசோதித்த குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் அவர்களிடம் காணப்பட்ட கடவுச்சீட்டு மற்றும் விமான டிக்கெட்டுகள் போலியானவை என்பதை கண்டுபிடித்துள்ளனர்.
இதனையடுத்து அவர்களை கைது செய்தநிலையில் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் புத்தளம் பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் அவருக்கு 24 வயதெனவும் ஏனைய நால்வரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர்கள் எனவும் தெரியவருகிறது.