யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக அமைச்சர் சந்திரசேகர் நியமனம்
யாழ்ப்பாண (Jaffna) மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினரும், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் (Anura Kumara Dissanayake) கடந்த 28ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் வகையில் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நியமனம் தொடர்பாக பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஏ. எச்.எம்.எச். அபயரத்னவினால் (A.H.M.H. Abayarathna) கடற்றொழில் அமைச்சருக்கு முகவரியிடப்பட்டு யாழ் மாவட்ட அரசாங்க அதிபருக்கு கடிதம் மூலம் அறியத்தரப்பட்டுள்ளதாக மாவட்ட செயலக ஊடக பிரிவு அறிவித்துள்ளது.
போராளிகளை தமிழ் மக்கள் கைவிட்டது ஏன்? ஜே.வி.பியிடம் இருந்து முன்னாள் போராளிகள் கற்றுக்கொள்ளவேண்டிய சில பாடங்கள்!!
புதிய தலைவர் நியமனம்
இதேவேளை இலங்கையின் புதிய அமைச்சரவையில் கடற்றொழில், நீரியல் வள மற்றும் கடல் வளங்கள் அமைச்சராக இராமலிங்கம் சந்திரசேகர் கடந்த 18 ஆம் திகதி பதவியேற்றுள்ளார்.
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் (NPP) தேசியப்பட்டியல் ஊடாக சந்திரசேகர் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.
இலங்கை நாடாளுமன்றத்தின் குழுக்களின் பிரதித் தலைவராகவும் தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினராகவும், யாழ் மாவட்ட அமைப்பாளராகவும் கடந்த காலங்களில் இவர் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |