அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள் தப்பியோட்டம்!
அனுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இருந்த இரண்டு கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த இரு கைதிகளும் இன்று வெள்ளிக்கிழமை (29) தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
திறந்தவெளி சிறைச்சாலை சிற்றுண்டிச்சாலையில் பணியாற்றிய இரண்டு கைதிகளே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர்.
சிறைத்தண்டனை
தப்பிச் சென்ற கைதிகள் தங்களின் சிறைச் சீருடைகளை களைந்துவிட்டு சிவில் உடைகளில் தப்பிச் சென்றுள்ளனர்.

இவர்களில் ஒருவருக்கு 02 மாத சிறைத்தண்டனையும் மற்றைய நபருக்கு 6 மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கைது நடவடிக்கை
தப்பியோடிய கைதிகளில் ஒரு கைதி அநுராதபுரத்திலுள்ள ஸ்ரவஸ்திபுரயைச் சேர்ந்தவர் எனவும் மற்றைய கைதி களனியையும் சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.

தப்பிச் சென்ற இருவரையும் கைது செய்ய அநுராதபுரம் காவல்துறையினரும் சிறைச்சாலை அதிகாரிகளும் இணைந்து நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 1 நாள் முன்