கொழும்பு வெள்ளவத்தையில் வசிப்போருக்கு முக்கிய தகவல்!
கரையோரப் பாதையில் தொடருந்துகளை இயக்குவதில் சிறிது தாமதம் ஏற்படக்கூடும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த கால தாமதமானது இன்று(29) முதல் நாளை மறுதினம்(31) வரை நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பம்பலப்பிட்டி தொடருந்து நிலைய பகுதியில் முன்னெடுக்கப்படும் திருத்தப் பணிகள் காரணமாக இவ்வாறு தொடருந்து சேவையில் தாமதம் ஏற்படக்கூடும் என அதன் பிரதி பொதுமுகாமையாளர் என் ஜே. இந்திபொலகே தெரிவித்துள்ளார்.
தொடருந்து தாமதம்
இதனால் கொழும்பில் இருந்து வெள்ளவத்தை வரையான தொடருந்து சேவை ஒரு வழி மார்க்கத்தில் முன்னெடுக்கப்படும் என்பதால், சில சந்தர்ப்பங்களில் தொடருந்து சேவை இரத்து செய்யப்படக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இரவுக்குப் பின்னர் தொடருந்து சேவை வழமைக்குத் திரும்பும் என தொடருந்து திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |