சிறை அதிகாரிகளுக்கு வழங்கப்படவுள்ள இரண்டாவது ‘டோஸ்’ - வெளியானது விபரம்
நாளை (ஏப்ரல் 29) முதல் கொவிட் - 19 நோய்த்தடுப்பு திட்டத்தின் கீழ் சிறை அதிகாரிகளுக்கு அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி இரண்டாவது டோஸ் வழங்கப்படும் என சிறைச்சாலை செய்தித் தொடர்பாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்..
அதன்படி, முதல் டோஸ் பெற்ற 5,153 அதிகாரிகளுக்கு நாளை (ஏப்ரல் 29), நாளை மறுநாள் (ஏப்ரல் 30) மற்றும் மே 1 ம் திகதி கொழும்பு சிறைச்சாலை, வெலிக்கடை சிறைச்சாலை, கொழும்பு ரிமாண்ட் சிறை, மகஸின் சிறைச்சாலை, களுத்துறை, குருவிட்ட, நீர்கொழும்பு., பல்லன்சேனா, வத்தரக மற்றும் அம்பேபுச சிறை அதிகாரிகளுக்கு தடுப்பூசி போடப்படும்.
பழைய போகம்கற மற்றும் தும்பற சிறைச்சாலைகள் மற்றும் பல்லேகேல திறந்தவெளி சிறைச்சாலையில் மே 3 மற்றும் மே 4 ஆகிய திகதிகளில் கடமையில் உள்ள அதிகாரிகளுக்கும், மே 7 மற்றும் மே 8. ஆகிய திகதிகளில் அங்குனகொலபெலெசா, காலி, மாத்தறை மற்றும் வீரவில சிறைச்சாலைகளின் அதிகாரிகளுக்கும் இரண்டாவது டோஸ் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகளில் கொவிட் ஆபத்து இருப்பதால், தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் என்று சிறை செய்தித் தொடர்பாளர் மேலும் தெரிவித்தார்.