தமிழ் தலைவர்களுடனும் நாளை ஜெய்சங்கர் சந்திப்பு
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கையை வந்தடைந்துள்ளார்.
இலங்கைக்கு கடன் வழங்குவது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்திடம் இந்தியா உத்தரவாத கடிதத்தை வழங்கியுள்ள நிலையில், அவரின் இந்த விஜயம் இடம்பெற்றுள்ளது.
கட்சிகளுக்கு அழைப்பு
இந்த நிலையில், இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர் நாளை தமிழ் தேசியக் கட்சிகளையும் கொழும்பில் சந்தித்து கலந்துரையாடவுள்ளதுடன், இதற்கான அழைப்பும் கட்சிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
எனினும் குறித்த கலந்துரையாடலில் தாம் பங்கேற்றப் போவதில்லையென தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம், நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவை வந்தடைந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் - கைச்சாத்திடப்படவுள்ள ஒப்பந்தங்கள்! |

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.
