ஜம்மு-காஷ்மீர் தாக்குதல் தொடர்பில் இராணுவ தலைமைத் தளபதி ஆய்வு
ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் கடந்த வாரம் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 4 இராணுவ வீரா்கள் உயிரிழந்தனா்.
இந்நிலையில், இராணுவ தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே திங்கட்கிழமை பூஞ்ச்சிற்கு விஜயம் செய்தார்.
அங்கு மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைள் குறித்து இராணுவ தலைமைத் தளபதி ஆய்வு நடத்தினாா்.
இராணுவ தளபதிகளைச் சந்தித்து
அத்துடன் இராணுவ தளபதிகளைச் சந்தித்த அவா், இராணுவ நடவடிக்கைகளை மிகுந்த தொழில் நோ்த்தியுடன் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினாா்.
இதேவேளை எந்தவொரு சூழலிலும் உறுதியுடன் இருக்குமாறும் அவா்களுக்கு அறிவுறுத்தினாா்.
மேலும் இராணுவ வீரா்களின் உயிரிழப்புக்கு காரணமான பயங்கரவாதிகளை ஒழிக்க ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சுரன்கோட், ரஜெளரி மாவட்டம் தானாமண்டி வனப் பகுதிகளில், 5 நாட்களாக நடைபெறும் இராணுவ நடவடிக்கைகள் குறித்தும் மனோஜ் பாண்டே ஆய்வு மேற்கொண்டாா் என இராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |