சடலங்களை தகனம் செய்ய பணம் அறவிட வேண்டாம் - அமைச்சர் ஆலோசனை
corona
sri lanka
death
By Shalini
கொரோனா காரணமாக மரணிப்போரின் சடலங்களை தகனம் செய்ய எந்தவொரு தொகையையும் அறவிட வேண்டாம் என அரசாங்க சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் ஆலோசனை வழங்கியுள்ளார்.
உள்ளூராட்சி பிரதானிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதில், சகல மயானங்களுக்கும் சடலங்களை தகனம் செய்வதற்கான எரிவாயுவை இலவசமாக வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் எரிவாயுவை விரைவில் பெற்றுத் தருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்
1ம் ஆண்டு நினைவஞ்சலி