ஜப்பானிய நாடாளுமன்ற தேர்தல்: பெரும்பான்மையை இழந்த ஆளும் கட்சி
ஜப்பானின் (Japan) 2024ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தலில் ஆளும் கட்சி உட்பட எந்தவொரு கட்சியும் பெரும்பான்மையை பெறவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜப்பானின் பொதுத் தேர்தலானது, நேற்றுமுன்தினம் (27) இடம்பெற்றது.
ஜப்பான் பிரதமராக இருந்துவந்த ஃபுமியோ கிஷிடா (Fumio Kishida) பதவி விலகியதையடுத்து, ஷிகெரு இஷிபாவை (Shigeru Ishiba) கட்சித் தலைவராக ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சி கடந்த மாதம் தோ்ந்தெடுத்தது.
ஜனநாயகக் கட்சி
அதையடுத்து, அவா் நாட்டின் அடுத்த பிரதமராகப் பொறுப்பேற்றாா். முன்னதாக, ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக லிபரல் ஜனநாயகக் கட்சியைச் சோ்ந்த மூன்று எம்.பி.க்கள் பதவி விலகியதால் அந்தக் கட்சி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தது.
எனவே, புதிதாக தோ்தல் நடத்தி தனிப் பெரும்பான்மையை மீண்டும் பெறுவதற்காக நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தோ்தல் நடத்த ஷிகெரு இஷிபா முடிவு செய்தாா்.
இந்த நிலையில், நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சி பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மையை இழந்துள்ளது.
நாடாளுமன்ற தோ்தல்
இது, பிரதமர் ஷிகெரு இஷிபாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது ஆட்சியமைக்க கூட்டணிக்கு வெளியே பிற கட்சிகளின் ஆதரவைத் தேடுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதமர் ஷிகெரு இஷிபாவின் லிபரல் ஜனநாயகக் கட்சி கடந்த 2009ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பைப் பறிகொடுத்தற்குப் பிறகு, 2012 ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்தது.
அதன்பிறகு, அந்தக் கட்சி சந்தித்திருக்கும் மிக மோசமான தோல்வி இதுவாகும். ஜப்பானிய நாடாளுமன்றத்தில் ஆட்சியமைக்க தேவையான 465 இடங்களில் ஒரு கட்சி 233 இடங்களை பெறுவதன் மூலமே பெரும்பான்மை பெற முடியும் இருப்பினும், லிபரல் ஜனநாயகக் கூட்டணி 215 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது.
இந்நிலையிலேயே, தற்போது கூட்டாட்சி அமைப்பதற்காக ஏனைய கட்சிகளின் ஆதரவு கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |